• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!

by Tamil2daynews
February 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
SR PRODUCTIONS தயாரிப்பில்,  “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக   “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.

“Under 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

தொழில்நுட்ப குழு
தயாரிப்பு : SR PRODUCTIONS
தயாரிப்பாளர் : ஜெகதீஸ்
இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்
இசை : சாம் சி.எஸ்
பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா
பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி
புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா
PRO – சதீஷ் (AIM)

Previous Post

‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

Next Post

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்!

Next Post

ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.