• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!

by Tamil2daynews
March 9, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான  சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர். இணை தயாரிப்பாளர்  சாய்பிரபு ஜெயக்குமார்.இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இயற்கை அழகும், நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமூகப் பொறுப்புணர்வும், விறுவிறுப்பும் இணையும் இப்படம் குறித்த  மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Previous Post

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!

Next Post

ZEE5 “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

ZEE5 “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.