• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

by Tamil2daynews
November 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

 

திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒரு சில திரைப்படங்களின் கதை முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கும். அத்தகைய திரைப்படமான ‘ஹைக்கூ’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’, இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.படம் குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹைக்கூ’ திரைப்படத்துக்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழ செய்தது. உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. ஆனால், திரையரங்குகளுக்குச் சென்றபோது வயதானவர்கள்கூட இப்படத்துடன் தங்களை தொடர்புபடுத்தி பாராட்டியது மகிழ்ச்சியளித்தது. தற்போது நெட்ஃபிலிக்ஸ் மூலம் ஹைக்கூ திரைப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நெட்ஃபிலிக்ஸ் தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “ஹைக்கூ திரைப்படம் எங்களுக்கு மகிழ்ச்சியான மனநிறைவான அனுபவம் தந்தது. இப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டுக்காக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திரையரங்குகளில் படம் வெளியான பிறகு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. தற்போது அவர்கள் எங்கிருந்தாலும், சிறந்த ஒளி மற்றும் ஒலி தரத்தில் இப்படத்தை ரசிக்கும் வாய்ப்பை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி” என்றனர்.

அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. நுட்பமான திரைக்கதை, உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய கதைக்களம் மற்றும் சித்து குமாரின் மனதை வருடும் இசை ஆகியவை என ’ஹைக்கூ’ திரைப்படத்தை வரும் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்திலும் ரசிக்கலாம்.

Previous Post

பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

Next Post

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Next Post

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.