• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

by Tamil2daynews
March 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம் 

ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறும்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் ’வெளவல்ஸ்’ (Vowels). ஐந்து படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை காதலை மையக்கருவாக கொண்டு எழுதப்பட்ட கதை மட்டுமே, அதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. அதே சமயம், இந்த ஐந்து கதைகளும் உயிர் தொடர்புடையது என்பதால் ’வெளவல்ஸ்’(உயிரெழுத்துக்கள்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

1. கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் முட்டாள்தனமான காதலால் நடக்கும் கொலை!

2. ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்வது!

3. காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும் முட்டாள் மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமான காதல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி!

4. அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவித யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது  காதல் உடனும் பயணிக்க வைப்பது!

5. உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய், என்பதை எண்ணங்களின் பிரதிபலிப்பான கனவுகள் மூலம் உணர்த்துவது?
Vowels Movie Review: Anthology fatigue hits before the halfway markஆகிய ஐந்து கதைகள் மூலம் காதலின் வெவ்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் மனதுக்கு இறக்கும் முயற்சி தான் இந்த ’வெளவல்ஸ்’ (Vowels).

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. கல்லூரி மாணவராக பல படங்களில் நடித்த சின்னி ஜெயந்த், கல்லூரி பேராசிரியாக நடித்திருப்பதும், அவரது முதிர்ச்சியான வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதத்திற்கான தனி அப்ளாஷ் கொடுக்கலாம்.

தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை மிக சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐந்தாவதாக இடம்பெறும் கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி,  ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, தரம் மிக்கதாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணம் மற்றும் கோணங்கள் கவனம் ஈர்க்கும்படி உள்ளது. மற்ற கதைகளில் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
Vowels Tamil Movie Collection | Budget | OTT | Hit/Flop » Tenvowசரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஐந்தாவது கதையில் இடம்பெறும் மேற்கத்திய இசை மற்றும் பாடல் மனதை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அனைத்து கதைகளையும் சுவாரஸ்யமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து முழுப்படத்தையும் வேகமாக பயணிக்க வைத்திருக்கிறது.

திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், அனைவரும் காதலை கருப்பொருளாக கொண்டு எழுதியிருக்கும் கதை, மற்றும் அதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்த விதம், முழு படத்தையும் தொய்வின்றி நகர்த்தி சென்றாலும், எந்த கதையும் அழுத்தமாக கையாளப்படவில்லை. ஒரு கதை முடிந்த உடன் மற்றொரு கதை தொடங்கும் போது, முந்தை கதை நம் நினைவில் இருந்து சுத்தமாக நீங்கி விடுவது, இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ஐந்து கதைகளிலும் கையாளப்பட்ட மெசஜ் எளிமையானது என்றாலும், அதை காதலோடு சேர்த்து சுவாரஸ்யமாக சொன்ன விதத்தின் மூலம் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் எடுத்துக் கொண்ட கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சொல்லி சற்று ரசிக்க வைத்தாலும், யூகி சேதுவின் கதையை தவிர மற்ற கதைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

புதிய முயற்சி என்கிற முயற்சிக்கு சின்னதா ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்.

ஐந்து இயக்குனர்களுமே திரைக்கதையில் ஆங்காங்கே சற்று சொதப்பி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது

ஐவரின் முயற்சிக்கு ஒரு பாராட்டுக்கள்
Previous Post

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

Next Post

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

Next Post

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.