• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

by Tamil2daynews
March 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

 

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமான ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் இப்போது யார் நடிக்கிறார் என்பது படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.  இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் மற்றும் பிடிஎஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது.
’டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் நடிகர்கள் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம், டங்கல் டிவி, ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது, “‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரம் ’டிமாண்டி காலனி’ ஃபிரான்சைஸில் மிக முக்கியமானது மற்றும் சுவாரஸ்யமானதுமானது. பழிவாங்கும் உணர்வை நோக்கமாகக் கொண்டது இந்த தீய கதாபாத்திரம். இதற்கு சாதாரண நடுத்தர வர்க்க மனிதரைப் போல தோன்றும், எந்த நேரத்திலும் கொடூரமாக மாறக்கூடிய ஒரு நடிகர் தேவைப்பட்டார். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒருவராக குரு சோமசுந்தரம் இந்தப் படத்தில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவரின் நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார்.

இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி யாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். குமரேஷ் டி எடிட்டிங்கை கவனிக்கிறார்.

அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கிய ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் இந்த கோடையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

Previous Post

தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்

Next Post

நெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!

Next Post

நெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.