• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!

by Tamil2daynews
March 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!

 

மும்பை, மார்ச் 18, 2026: சில திரைப்படங்கள் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதை விட்டு அகலாது. மனதை தொடும் கதையோடு, இருவேறு கலாச்சாரங்களை அழகாக காட்சிப்படுத்திய ‘மேட் இன் கொரியா’ திரைப்படமும் அதுபோன்ற தாக்கத்தைத்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் இயக்கத்தில்,பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான இந்த படம் நெட்ஃப்லிக்ஸின் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும்.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மார்ச் 12 அன்று ப்ரீமியர் ஆன ‘மேட் இன் கொரியா’ அதன் கவரும் கதைக்களத்தால் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தால் பாராட்டுகள் பெற்றது.

நெட்ஃப்லிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் கூறுகையில்,“எங்களின் உலகளாவிய 10 ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படங்களின் பட்டியலில்,’மேட் இன் கொரியா’ போன்ற ஒரு கதை தென்னிந்திய திரைப்படப் பட்டியலில் இருந்து முதலிடத்தைப் பிடித்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் இருந்து உலகம் கண்டறிய இன்னும் பல கதைகள் உள்ளன என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை இணைத்து காதல், நட்பு, சொந்தம் மற்றும் குடும்பம் போன்ற உணர்வுகளை உலகம் முழுதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் வலுவாக பேசியுள்ளது. உள்ளூர் கதைகள் உலகளவில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்பதை உறுதியளிக்கிறோம்” என்றார்.
படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவு குறித்து நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களைதான் நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். எல்லா படங்களுக்கும் உழைப்பும் அர்ப்பணிப்பும் கொடுத்தாலும் சில படங்கள்தான் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். ‘மேட் இன் கொரியா’ எனக்கு அப்படியான ஒரு படம்.  திரைக்கதை படிக்கும்போதே செண்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து போனது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமுடன் இருந்தேன். கார்த்திக் சார் உடன் பணியாற்றியது அருமையான அனுபவம். கதையை தெளிவாக ரசிகர்களுக்கு எடுத்து செல்வார். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த கதையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “சில படங்களுடன் பார்வையாளர்கள் உணர்வுப்பூர்வமாக இணைவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அந்த வகையில், ‘மேட் இன் கொரியா’ படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிரெண்டாகி, இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. செண்பா கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் தனது அற்புதமான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகருக்கும், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்க உதவிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” என்றார்.

மனதை தொடும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் உருவாகும் தனித்துவமான கதைகள் உலகம் முழுதும் நெட்ஃபிலிக்ஸ் கொண்டு செல்கிறது என்பதை இந்தப் படைப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Previous Post

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

Next Post

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்

Next Post

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.