• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“அறிவு” படக்குழுவின் மனிதநேயம் – பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் !

by Tamil2daynews
April 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“அறிவு” படக்குழுவின் மனிதநேயம் – பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர்  சாய்வினோத் ஜெயக்குமார் !

Movietron Production சாய்வினோத்  ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசு பொருளாகி உள்ளது.

மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய  வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார்.

அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த உதவி, படக்குழுவின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
“அறிவு” திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பெண் உரிமைகளை மையமாகக் கொண்ட வலுவான சமூகக் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாறு பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான  சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.

இப்படத்தினை Movietron Production சார்பில் தயாரிப்பாளர்   சாய்வினோத் ஜெயக்குமார் பெரும் பொருட்செலவில் தரமான படைப்பாக உருவாக்கி வருகிறார் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.  இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர்.

மூணாறு பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தேனியில் இரண்டாம் கட்டப்படிப்பு நடந்து வருகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாக படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  சமூகச் செய்தியையும் விறுவிறுப்பையும் இணைக்கும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மனிதநேய செயல்களுடன் முன்னேறும் “அறிவு” திரைப்படம், திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்!

Next Post

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்!

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.