• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்!

by Tamil2daynews
November 28, 2019
in சினிமா செய்திகள்
0
பிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை அவரது பிறந்த நாளன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிறந்த நாளைக் கொண்டாடியது மட்டுமின்றி, அவரது தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படம் வெகு சிறப்பாக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், “வழக்கமான பாணியிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றியது பெருமகிழ்ச்சியாக அமைந்தது. ஏற்கெனவே பல மாறுபட்ட வேடங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்த உதயநிதி ஸ்டாலின், ‘சைக்கோ’ படத்தில் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொட்டிருப்பதை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள். முன்பே படத்தின் டீஸரும், முதல் பாடலும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரையரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகரையும் திருப்திபடுத்தும் வகையிலான தனித்தன்மை கொண்ட படமாக ‘சைக்கோ’ இருக்கும் என்பதை மட்டும் இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எதிர்வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் மற்ற பாடல்களையும் ட்ரைலரையும் விரைவில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.

மிஷ்கின் எழுதி இயக்கியிருக்கும் ‘சைக்கோ’ படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி மற்றும் நித்யா மேனன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம் புலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ‘மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜாவின் இசை, ‘சைக்கோ’ படத்தில் பலராலும் பாராட்டப்படும் சிறப்பம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MyskinPsychoTamil MovieUdhainithi Stalin
Previous Post

Iruttu Movie Stills

Next Post

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

Next Post
ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.