• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

by Tamil2daynews
July 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

 

‘தபாஹி- Tabaahi ‘பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) – கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன.

‘தபாஹி’ பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் ‘தடுமாறுதே’ எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ‘தபாஹி’ பாடல் – தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்… ‘தடுமாறுதே’ பாடல்-  மென்மையான உணர்வுகள்- ஏக்கம்- சொல்லப்படாத விசயங்கள் – என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல்- ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.’ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள ‘தடுமாறுதே’ பாடல் – ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும்… அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.

‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும்… ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.
ரசிகர்களை ஈர்த்த டாக்ஸிக் படத்தில் தடுமாறுதே பாடல் இணையத்தில் வைரல் | News in Tamilதனிஷ்க் பாக்சி- அர்ஸ்லான் நிஜாமி- ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இசையமைக்கப்பட்டுள்ள இந்த காதல் பாடல் – சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது. இவர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தனது குரலில் பாடியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்.. ‘மதோஷ்’ (இந்தி), ‘மனமோஹகா’ (கன்னடம்), ‘மனசகதே’ (தெலுங்கு), ‘தடுமாறுதே’ (தமிழ்), ‘மதுமோஹினி (மலையாளம்) ஆகிய பெயரில் வெளியாகி உள்ளது. பாடலுக்கான வரிகளை பிரபல எழுத்தாளர்களான பிரமோ மரவந்தே ( கன்னடம் ) அர்ஸ்லான் நிஜாமி – சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா  குரேஷி ஆகியோர் நடிக்கும் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் திரைப்படம் -மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியை கொண்டிருக்கிறது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,

”அர்ஸ்லான் நிஜாமி – ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் ‘தடுமாறுதே’ பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் ‘டாக்ஸிக்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ… அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,

”தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்… மென்மையான உணர்வுகளும்… இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது” என்றார்.

யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர்  இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ‘ (Toxic A Fairy Tale for Grown -Ups) திரைப்படம் – கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Previous Post

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

Next Post

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.