• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டி சி (DC) – விமர்சனம்

by Tamil2daynews
August 10, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டி சி (DC) – விமர்சனம் 

 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம் டி சி.

தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.

அந்த குடும்பத்திற்காக போலீஸை கொடூரமாக கொலை செய்கிறார் லோகேஷ் கனகராஜ். போலீஸ் இவர்களை தீர்த்துக்கட்ட தேடுகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள். அங்கு சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ்.

அந்த ஹோட்டலுக்கு வரும் போலீஸ் லோகேஷ் பிடிப்பது மட்டுமல்லாமல், லோகேஷுடன் பழகிய சஞ்சாவையும் சுட்டுவிடுகிறது. இதனால் சஞ்சனா இறந்துவிடுகிறார். அவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழல் இருந்தும் அதை அந்த போலீஸ் அதிகாரி செய்யாமல் கொன்றுவிடுகிறார். போலீஸ் பிடியில் உள்ள லோகேஷ், என்கவுண்டரில் இருந்து தப்பிக்கிறார்.
DC' movie review: Anirudh Ravichander goes berserk in Arun Matheswaran's slick but shallow bloodfest - The Hindu

இதன்பின், விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) கேபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். வெவ்வேறு பாதையில் பயணித்த இவர்கள் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் படத்தின் மீதி கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அனிருத் அனிருத் அனிருத் மட்டும்தான். மொத்த திரைப்படத்தையும் தனது பின்னணி இசையில் சுமந்து சென்று பட்டையை கிளப்பியுள்ளார். இடைவேளை, கிளைமாக்ஸ் என குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லாமல், முதல் காட்சியில் தொடர்ந்து கிளைமாக்ஸ் கிரெடிட்ஸ் வரை அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது. இப்படியொரு பின்னணி இசையில் மொத்த திரைப்படத்தையும் பார்க்கும் அனுபவம் என்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இதுவரை இயக்குநராக தமிழ் சினிமாவில் பல பாராட்டுகளை பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது டிசி படத்தில் ஹீரோவாகவும் நன்றாக நடித்துள்ளார். தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதை திரையில் தனது நடிப்பால் தெளிவாக வழங்கியுள்ளார். முதல் படத்திலேயே ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார். இது லோகேஷுக்கு ஒரு புதிய திருப்பம்.

நடிகை சஞ்சனாவிற்கு குறுகிய காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தின் தாக்கம் இறுதி வரை உள்ளது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை வாமிகா கேபி, நம் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பின் அவருடைய கதாபாத்திரத்தின் Transformation திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சுவாரஸ்யமான திரைக்கதை சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரைக்கதையில் தொய்வு என்று பெரிதாக எதுவும் இல்லை. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, சஞ்சனா – லோகேஷ் கனகராஜுக்கு இடையிலான காட்சிகள், வாமிகா கேபி தனது சுதந்திரத்தை உணர்ந்த காட்சி, இடைவேளை, கிளைமாக்ஸ் என படத்தை தரமாக திரைக்கதையில் செதுக்கியுள்ளார். இவை அனைத்திற்கும் மிகப்பெரிய அளவில் அனிருத்தின் பின்னணி இசை உதவியுள்ளது.
DC' movie review: Anirudh Ravichander goes berserk in Arun Matheswaran's slick but shallow bloodfest - The Hindu

இப்படத்தை பொறுத்தவரை வன்முறை என்பது இருமுனை கத்தி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், வன்முறை தான் இப்படத்தின் பிளஸ், அதே சமயம் ஏன், எதற்காக இவ்வளவு வன்முறை என்று கேள்வி எழுகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது.

மொத்தத்தில் படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவா அனிருத் ஹீரோவா என்கிற கேள்விக்குரியில் படத்தில் இருவரும் போட்டி போடுது பின்னி எடுத்திருக்கிறார்கள்.

அனிருத் இதில் முதலாவது ஜெயித்தாலும் லோகேஷ் கனகராஜ் தனது கம்பீரமான உடல் கட்டிலும் முகபாவனைகளும் ஜெயிக்கிறார்.

இந்த டிசி லோகேஷ் கனகராஜன் வெற்றிக்கு வழிவகுக்கும்.
Previous Post

போட்டோகிராபர் – விமர்சனம்

Next Post

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

Next Post

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.