• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

போட்டோகிராபர் – விமர்சனம்

by Tamil2daynews
August 10, 2026
in விமர்சனம்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

போட்டோகிராபர் – விமர்சனம் 

 

புகைப்பட கலைஞரான நாயகன் அஷ்ரப், இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறார். அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். சென்றவர்கள் யாரும் திரும்பி வராத மிக ஆபத்தான அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறும் அஷ்ரப், பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.

காட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல மர்மம் மற்றும் திகில் சூழல்களை எதிர்கொள்ளும் அஷ்ரப், அங்கிருத்து தப்பித்தாரா ?, அவர் புகைப்படம் எடுக்க நினைத்த மரத்தை பார்த்தாரா ? என்பதை திகில் மற்றும் உளவியல் கலந்து சொல்வதே ‘போட்டோகிராபர்’.

கதை எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், தனிமனித பயணத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு மர்மம், திகில், அமானுஷ்யம், உளவியல் ஆகிய உணர்வுகளின் பயணமாக படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக முழு படத்தையும் சுமந்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரமும், அவரது நடிப்பும் ஓவர் டோஸ் போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் பயணிக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் அவரது நடிப்பு பாராட்டை பெறுகிறது.

நாயகியாக நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அனனி சுவாமிநாதன் நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவின் நடிப்பும் நன்று.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேனின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் அமைதியையும், ஆபத்தையும் பார்வையாளர்கள் அச்சமடையும் வகையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால், வனப்பகுதியின் பெரும்பாலான காட்சிகள் பகல் நேரத்தில் நடப்பதாலும், அடர்ந்த வனப்பகுதி அல்லாத இடங்களில் காட்சிகள் பயணிப்பதாலும் நம்மால் அச்சமடைய முடியவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மேற்கொண்ட மிரட்டல் முயற்சிகளும் பெரும் தோல்வியடைந்திருக்கிறது.

ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை மற்றும் வித்தியாசமான ஒலிகள் கவனம் ஈர்க்கிறது. நாயகன் கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதத்தில் பயணித்திருக்கிறது.

ஆபத்து நிறைந்த ஒரு பயண கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரணவ், முதல் பாதி முழுவதையும் மிக மெதுவாக நகர்த்தியிருப்பது பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதையை வேகமாக விவரித்திருப்பதோடு, சில எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் படத்துடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்து விடுகிறார்.

இயக்குநர் அஷ்ரப், ஒரு புகைப்பட கலைஞரின் பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு, எழுதியிருக்கும் திரைக்கதை உயிர் பிழைக்கும் தனிமனித போராட்டத்தையும், சாகசத்தையும் காட்சி மொழியில் விவரிக்க முயற்சித்திருக்கிறது.

துவக்கம் முதலே மெதுவாக நகரும் படம், கதைக்குள் பயணிக்க தடுமாறுவதும், நேரத்தை கடத்துவதற்காக கையாளப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் முதல் பாதி படம் பார்வையாளர்களை சோர்வடைய வைத்து விடுகிறது. இரண்டாம் பாதியில் கதை தொடங்குவதும், இயற்கை, அம்மா – மகன் செண்டிமெண்ட், அதன் மூலம் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு படம் கவனம் ஈர்க்கிறது.

மொத்தத்தில் திரைக்கதையுடன் நாயகனின் பயணத்தை வேறு விதமாக கதைக்கலமாக அமைத்திருந்தால் இந்த போடுகிறவர் கிளிக் ஓகே ஆகியிருக்கும்
Previous Post

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

Next Post

டி சி (DC) – விமர்சனம்

Next Post

டி சி (DC) - விமர்சனம்

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.