Hi – விமர்சனம்

Hi – விமர்சனம் 

 

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பില്‍ உருவாகியுள்ள ‘ஹாய்’ (Hi) திரைப்படம்.

நயன்தாரா மற்றும் இளம் நடிகர் கவின் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஹாய்’. நயன்தாராவை விட கவின் சுமார் 5 வயது இளையவர் என்பதால், இருவரின் காம்பினேஷன் படம் தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. காமெடி, காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஃபீல் குட் ரொமான்டிக் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இப்படம் ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

தானொரு காதல் மன்னனாக கருதப்பட வேண்டும் என்ற லட்சியம் கொண்ட கவினுக்கு ஒரு காதலும் கை கூடவில்லை. அப்படியே நயன்தாரா பக்கம் கேமராவைத் திருப்பினால் அவருக்கு வீட்டில் அரங்கேற்றப்பட்ட திருமணம் மீது விருப்பமில்லை. வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிவருகிறார் நயன். கவினும் வந்தா காதலியோடு தான் வருவேன் என சென்னைக்கு வருகிறார். தமிழ்சினிமாவின் விதி 108-ன் படி, ஆக்சிடெண்டலாக இருவரும் சந்திக்கிறார்கள். பின் கவினுக்குள் நயன் மீது காதல் பொங்குகிறது. அது நயனுக்குள்ளும் பரவியதா என்பதும், இரு பேமிலியையும் இவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்பதும் படத்தின் மீதிக்கதை.
Hi' movie review: Kavin, Nayanthara anchor Vishnu Edavan's old-school wholesome entertainer - The Hinduதானொரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை கவின் மீண்டும் நிரூபித்துள்ளார். கோவை ஸ்லாங்கில் அவர் காட்டும் வெள்ளந்தித்தனம் மிரட்டுகிறது. காமெடி எமோஷ்னல் இரண்டிலுமே பின்னியுள்ளார். நயன்தாரா இந்தக் கேரக்டரில் மெச்சூட்-ஆக தெரிகிறார் என்பது உண்மை. மேலும் நாம் பத்து வருடங்களுக்கு முன்பே இந்த நயன்தாராவை பார்த்துவிட்டோம் என்பதால் அவரின் நடிப்பை பெரிதாக சிலாகிக்க முடியவில்லை. பாக்யராஜ், பிரபு, சுகாசினி, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் எல்லோருமே சூப்பர். ஆதித்யா கதிர் காமெடி பல இடங்களில் வொர்க்காகியுள்ளது.
ஜான் மார்ட்டின் பாசிட்டிவ் வைப் கொடுக்கும் இசையைத் தந்துள்ளார். வரிகளை கவனித்து ரசிக்க வைக்கும் பாடல் ஒன்றையும் தந்துள்ளார். ராஜேஷ் சுக்லா இப்படியான படங்களுக்கென்று ஒளிப்பதிவில் இருக்கும் பேட்டர்னை அப்படியே நகலெடுத்துள்ளார். அது நன்றாகவும் இருக்கிறது
Hi' movie review: Kavin, Nayanthara anchor Vishnu Edavan's old-school wholesome entertainer - The Hinduஇந்தப்படத்தின் கதை நாம் பாக்கியராஜ் காலத்திலே பார்த்த கதை என்றாலும் சிற்சில புது ஐடியாக்கள் அட போட வைக்கிறது. கதையின் ஆரம்பத்திலே நமக்கு முடிவு தெரிந்துவிடுகிறது என்றாலும் போதுமான அளவிற்கு படத்தை கலகலப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் விஷ்ணு எடவன். க்ளைமாக்ஸில் வரும் ஒரு முக்கியமான எமோஷ்னல் காட்சி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் கவின் நயனிடம் காதலைச் சொல்லாமல் இருப்பதற்கான காரணத்தை ஆழமாகச் சொல்லவில்லை. கேரக்டர்கள் ஆற்றும் வினைகளுக்கு தகுந்த காரணங்கள் இல்லை என்பதால் லாஜிக்கலாக பல கேள்விகள் எழுகிறது. ஆனால் படத்தின் பெரும் பில்லர்களான நட்சத்திரங்கள் தங்களின் நடிப்பால் அதையெல்லாம் மறக்க வைத்துவிடுகிறார்கள். படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் காமெடியும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.

முந்தைய இரண்டு படங்கள் தோல்விக்கு பிறகு கவினுக்கும் நயன்தாராவிற்கும் இந்த படம் ஓகே ரகம்.

ஓரளவு ஜாலியான படம் என்பதால் நிச்சயமாக ஒரு ஹாய் சொல்லலாம்
Next Post

Recent News

error: Content is protected !!