ஒன்ஸ்மோர் – விமர்சனம்

ஒன்ஸ்மோர் – விமர்சனம் 

 

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்ஸ்மோர். மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சார்பில் யுவராஜ் தயாரித்துள்ளார்.
இசையை மையமாக கொண்ட காதல் கதையாக ஒன்ஸ்மோர் அமைந்திருக்கிறது. அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திர்க்கிறது. கடந்த கால காதலை மறந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும் இளைஞரின் கதை. ஆனால் அவன் கடந்த காதல் திடீரென மீண்டும் அவனது வாழ்க்கைக்குள் வருகிறது.
அதற்கு பிறகு என்ன நடக்கிறது புதிய காதலுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். காதலை, பேரன்பை, பிரிவை, வலியை, போராட்டத்தை என அனைத்து உணர்ச்சிகளையும் அர்ஜூன் தாஸ் ஒரே நேரத்தில் நடித்துக் குவித்திருக்கும் விதம் அவரை அப்படியே கட்டிக் கொள்ள தூண்டுகிறது. வழக்கமாக வில்லனாக நடித்தாலே அவரை கொண்டாட கூட்டமிருக்கும் சூழலில், இதில் 2 கதாநாயகிகளுக்கான நாயகனாக வாழ்ந்திருக்கிறார். படம் பார்க்கும் அவருடைய ரசிகர், ரசிகைகள் அப்படியே அவர் கன்னத்தைக் கிள்ளித் தின்றுவிடுவார்கள் எனும் அளவுக்கு அப்படியொரு ஆத்மார்த்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிதி ஷங்கர் ஒவ்வொரு காட்சியிலும் தன் இயல்பான நடிப்பால் படபடக்க வைக்கிறார். குறிப்பாக, காதலுக்குச் சம்மதம் கிடைக்கின்ற பொழுதில் முகத்தை மூடிக்கொண்டு கலங்கிய கண்களோடு அவர் காட்டுகிற அந்த ஒரு ரியாக்‌ஷன் கோடி தகும். படக்குழு எப்படித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்களோ தெரியவில்லை… அறிமுக நாயகியாக நடித்துள்ள இந்தத் தேவதை சோனா அவ்வளவு பாந்தமாகவும், காந்தமாகவும் ஈர்க்கிறார்.

மில்லியன் டாலர்’ நிறுவனத்திற்காகவே பிரத்யேகமாக ஒரு கதையை எழுதிக்கொண்டு வந்தது போல், இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஒரு பேரற்புதமான படைப்பைக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் இது திரைப்படம் என்ற எண்ணமே வராதபடி, ஒரு நிஜ வாழ்வுக்குள் நம்மை இழுத்துச் செல்வது போல் கதையை அமைத்துள்ளார். கவிதையாய் நகர்கின்ற ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களோடு அப்படியே ஒட்டிக்கொள்ளும். அத்தனை பாடல்களையும் இயக்குநரே எழுதியுள்ளார். ‘செந்தாழம் பூ நிறத்தி’ என்ற ஒற்றை உவமையே அவரது வரிகளின் அற்புதத்தைச் சொல்லிவிடும். இசையும் பாடல்களும் சாரல் மழை போல் அமைந்துள்ளன. படமே இசைமயமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பாடலும் கூச்சசுபாவம் கொண்டவர்களைக் கூட ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு உள்ளது.

இந்தப் படத்தின் மூலம் தான் எழுந்த மார்க்கெட்டையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் தக்க வைத்துக் கொள்வார் அர்ஜுன் தாஸ்.

கதை முதல் பாதையில் சுமாராக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி வேகமாக நகர்த்து ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

இரண்டு பாடல்களால் ஒட்டு மொத்த படமும் சக்ஸஸ் ரகம்.

மொத்தத்தில் ஒன்ஸ்மோர் டைட்டிலை போலவே ரசிகர்களும் கேட்பார்கள்.
Next Post

Recent News

error: Content is protected !!