ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்
அந்தோணி இயக்கத்தில், அவர் கதாநாயகனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம்.காதல் மற்றும் உணர்வுபூர்வமான திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ வெளிநாட்டு வாழ் காதலர்களின் பழக்கவழக்கங்கள் உறவு முறைகள் எம்மாதிரி இருக்கும் என்பதை இப்படம் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
நாயகன் 100 படங்கள் நடித்த மாதிரி ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார் நாயகி அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு நடிப்பை வாரி வாங்கி இருக்கிறார்.
நண்பர்களாக வரும் இருவரும் எங்கேயோ ஏற்கனவே பார்த்த முகங்கள் நட்பின் அடையாளங்கள்.
காதலிக்காக காதலுக்காகவும் தன் பழக்கவழக்கங்களை விட்டு வட்டு அவர் கதறும் போதும் மீண்டும் அந்த பழக்கங்களை அவர் உணரும்போதும் காதலின் வலியை கதாநாயகி முகத்தில் மிளிர்கிறார்.
நாயகி பார்த்தவுடனே யார் இந்த பெண் என்று கேட்க வைக்கும் அவ்வளவு அழகான முகம்.உணர்வுப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வில் காதல் எவ்வாறு ஒளியேற்றுகிறது என்பதை இப்படம் பேசுகிறது.மனதை வருடும் காதல் காட்சிகளும், உணர்ச்சிபூர்வமான திருப்புமுனைகளும் இடம்பெற்றுள்ளன.ஜென் இசட் (Gen-Z) இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காதல் ஜோடிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.








