• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

by Tamil2daynews
September 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

 

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.

“நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார்.

கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond tribal woman) நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள் (Underwater sequences) வரை அனைத்திலும் துணிச்சலாக நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, கையில் அரிவாளுடன் நீருக்கடியில் அவர் வீற்றிருக்கும் காட்சி ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இயக்குநர் ரவீந்திரா புல்லேவின் பிரம்மாண்ட கற்பனையை, ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் அசத்தலான ஒளிப்பதிவும், சர்வதேச சண்டை பயிற்சியாளர் கெச்சாவின் கூர்மையான சண்டை வடிவமைப்புடன் ஜேக்ஸ் பிஜோயின் மிரட்டலான பின்னணி இசையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 27, 2026 அன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மைசா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம்: ரவீந்திரா புல்லே
தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்ரெட்டி, அனில் சையபுரெட்டி, வீரசாய் கோபா
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா
இசை: ஜேக்ஸ் பிஜோய்
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
கலை இயக்கம்: G M சேகர்
சண்டைப்பயிற்சி: கெச்சா
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் குமார், S2 மீடியா
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி
டிஜிட்டல் ஏஜென்சி: ஹாஷ்டேக் மீடியா
Previous Post

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

Next Post

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

Next Post

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.