• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

by Tamil2daynews
September 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

 

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை  நேரடியாகத் தொடுகின்ற படங்களைக்  கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது.

நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“எனக்கு குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும், காரணம் என் ரசனை அந்த மாதிரி. அந்த வகையில் ‘தரமணி’ படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமை சந்தித்துப் பேசினேன். ஆனாலும் அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லையோ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது..

அந்த சமயத்தில் ‘நீ சின்ன தயாரிப்பாளர் தானே?’ என்று என்னை சிலர் ஏளனமாகப் பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து ‘என் படத்தைத் தயாரியுங்கள்’ என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான்  இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது; என்னைத் தேடி வந்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’.

நானும் எஸ்.ஜே. சூர்யா சாரும் தான் இந்தக் கதையைக் கேட்டோம். எனக்கு கதை பிடித்திருந்ததை விட இயக்குநர் ராமுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருந்தது. சிலர் ‘இவனிடம் பணமே இல்லை, இவன் எப்படி படம் எடுக்கப் போகிறான்’ என்று கூட வதந்திகளைப் பரப்பினார்கள். அப்போது அவரிடம், ‘அண்ணே, இதுவரை 10 படங்கள் எடுத்திருக்கிறேன்; ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் பணம் இல்லை என்று படம் நின்றதே இல்லை. என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே அதைக் கணக்கிட்டுப்  படத்தையே துவங்குவேன்’ என்றேன்.

ஹீரோ நிவின்பாலி என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷம், ‘பிரேமம்’ படத்தில் இருந்தே அவரைப் பிடிக்கும். அதன்பிறகு சூரி வந்தார்.. கதாநாயகி என்கிறபோது கேட்கவே தேவையில்லை, அஞ்சலியிடம் ஒரு போன் காலிலேயே சம்மதம் வாங்கி விட்டோம். ராம் அண்ணன் படம் என்பதால் குட்டி இசைஞானி யுவன் சங்கர் ராஜாவும் எங்கள் படத்திற்குக்  கிடைத்தார்.

இந்தப் படத்தில் இப்போது கடைசிக் கட்ட வேலை வரை இயக்குநர் ராம் தான் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இன்னும் எத்தனை படம் வேலை செய்வது என்றாலும் எனக்கு சந்தோசமே.

இந்தப் படத்தை ‘ஆழி பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கி ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் வெளியிடுகிறது. கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபேரர் (Wayfarer) நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் சுப்பா ரெட்டியின் கலர் அண்ட் கலர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கர்நாடகாவில் டிடி என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. ஓவர்சீஸ் உரிமையை ட்ரிபுள் எம் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது,

“எப்போதுமே இயக்குநர் ராம் இருக்கும் மேடையில் ஏறும்போது ஒரு குற்ற உணர்ச்சியோடு தான் ஏறுவேன்; காரணம் முத்துக்குமார் சார் இல்லாத மேடை என்பதால் அந்த உணர்வு என்னிடம் எப்போதும் இருக்கும். அவங்க ரெண்டு பேரோட காம்பினேஷனில் வந்த பாடல்கள் எல்லாமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். நிவின்பாலியின் அலட்டல் இல்லாத நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல ‘விடுதலை’ படத்தில் சூரி பிரமிக்க வைத்திருந்தார். எல்லோரும் சொல்வார்கள், வெற்றிமாறன் சார் சூரியை மாற்றிவிட்டார் என்று! ஆனால் அது உண்மை அல்ல; அவர் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்கள் எல்லோரையும் தான் மாற்றி இருக்கிறார். அந்த கதாபாத்திரம் மாறவில்லை, பார்க்கும் நம்முடைய பார்வை மாறுகிறது; அதைத்தான் வெற்றிமாறன் செய்தார். ராம் சார் படங்களில் அவர் இயற்கையைக் கொண்டாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்; வெவ்வேறு விதங்களில் பஞ்சபூதங்களையும் அவர் கொண்டாடுவார்” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும்போது

“எனக்கு இந்த மேடை வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். நான் யுவன் சங்கர் ராஜாவின் மிகப்பெரிய ரசிகன்; எந்த அளவுக்கு என்றால், நான் முதன்முதலாக கீபோர்டு வாங்கி பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தது யுவன் சாரோட பாட்டுக்களை வச்சுதான். அதன் பிறகு மியூசிக் புரொடக்ஷன் படிக்க ஆரம்பித்தபோது யுவன் சாரோட சாங்ஸ் எடுத்துதான் ஒவ்வொன்றாக கற்க ஆரம்பித்தேன். ஆனால் யுவன் சாருடைய எந்த பாட்டாக இருந்தாலும் அதில் ஒரு ஆழம், அவ்வளவு அன்பு, ஆன்மா இருக்கும். இது எப்படி வருகிறது என்று யாருக்குமே தெரியாது, அவருக்கு மட்டும் தான் தெரியும். அதனால் இன்னும் நான் அவரை ஃபாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கிறேன். ‘மரியான்’ படத்தின் போது ஒரு பாடல் பாட ஏ.ஆர். ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்தார். அப்போது அங்கே நான் கடைசி அசிஸ்டன்ட்.. யுவன் பாடுவதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்லி ரகுமான் சாரிடம் கேட்டேன், ஆனால் உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் இன்று யுவன் சாருடன் இந்த மேடையில் நானும் ஒருவராக அமர்ந்திருப்பது பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை” என்றார்.

பாடலாசிரியர் மதி புகழேந்தி பேசும்போது,*
“இது எனக்கு முதல் மேடை. நான் அகரம் பவுண்டேஷன் வழியே வந்த மாணவன். இயக்குநர் ராமிடம் ஒரு உதவியாளனாகத்தான் சேர்ந்தேன். இப்போது அவரது படத்திலேயே பாடல் எழுதியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷிடம் பாடல் எழுதுவது ரொம்ப வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. நிறைய விஷயங்களைக் கேட்டு ஆலோசனை செய்து எழுத முடிந்தது” என்றார்.
இயக்குநர் பார்த்திபன் பேசும்போது,

“இங்கே வந்திருக்கிற சினிமா காதலர்கள், ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம்! இளைஞர்கள் எல்லோரும் எவ்வளவு உயரத்தையும் அடையலாம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் சூரி. அவங்களுடைய வளர்ச்சி ஒரு சாதாரண நடிகரின் வளர்ச்சியல்ல, மிகப்பெரிய உழைப்பு.

இயக்குநர் ராமுக்கு சினிமாவைத் தாண்டி  வேறு எதுவுமே தெரியாது;  சினிமாவில் அவர் ஒரு மந்திரவாதி. அன்பானவர், அடங்காதவர்,  நல்ல படம் எடுப்பதில் அசராதவர். அவர் படங்கள் எப்போதும் மிக எலிகண்ட்டாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் டைரக்டர் ராமின் கோபமும் ஸ்டைலும்தான் முதல் ஹீரோவாக வெளிப்படும். அதனால்தான் அவரது மவுஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

‘நிவின் பாலிடெக்னிக்’ என்று சொல்லும் அளவிற்கு நிவின் பாலியின் நடிப்புத் தொழில்நுட்பம் அலாதியானது; நடிப்பில் ஒரு ‘நடிக்காத தன்மை’ அவரிடம் இருக்கும். சூரி ரொம்ப பிசியாக இருந்தாலும், தான் வாங்கும் பாராட்டுகளுக்கு நீண்ட குரல்பதிவு மூலம் உடனே பதிலளிக்கும் அந்தப் பண்பு அவரை இன்னும் பல கோடிகள் உயரத்திற்குச் சேர்க்கும்.

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து வேலை செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் அவருடைய தீவிர ரசிகன் நான். அவருடைய மியூசிக்கை விட அவருடைய குரல் ரொம்ப ஹான்டிங்காக இருக்கும்; காதல் தோல்வி அடைந்தால் கேட்கத் தோன்றும் குரல் அது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது கதை எதை நோக்கிப் போகிறது என்ற மர்மம் இருக்கு, அதுதான் ஒரு இயக்குநரின் பலம். இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிலேயே பார்க்க ஆசைப்படுகிறேன்!” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,

“பாலுமகேந்திரா சாருடன் இருந்தபோது, ‘ஒருத்தன் நல்லா கதை சொல்றான்டா’ என்று ஒரு நாள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் பேசினார்; ரொம்ப நாட்கள் அப்படி அவர் பேசிப் பார்த்ததில்லை. அவர்தான் இயக்குநர் ராம். ரெண்டு பேர் கதை சொல்வதை பார்க்கும்போது, ‘எனக்கு இப்படி சொல்ல வரவில்லையே’ என்று ஏக்கம் இருக்கும். அதில் ஒருவர் ராம், இன்னொருவர் என்னுடைய சீனியரான தங்கவேலன். ‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’, ‘தங்க மீன்கள்’ என இப்போது ‘ஏழு கடல் ஏழுமலை’ வரை ஒரு மனிதராக, இயக்குநராக அவர் எப்படி தன்னை விரிவாக்கிக் கொண்டே வருகிறாரோ, அதுபோல அவருடைய கதைகளும் விரிவாக்கம் அடைந்து கொண்டே இருக்கிறது; கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தில் நிறைய ஆர்டரை மாற்றி, ரசிகர்களுக்குப் புரியும் வகையாக எளிமைப்படுத்தி, பார்வையாளனுக்கு அதனுடைய எமோஷன் நேரடியாக வந்து சேர்வதற்கான ஒரு கதை சொல்லலை இதில் அழகாக அவர் உருவாக்கி இருக்கிறார். மனிதர்களுடைய ஒலியும் இன்னொரு உயிரினத்துடைய ஒலியும் ஒன்றாகவே ஒலிக்கிறது இந்த படத்தில்தான் என்பதுதான் இப்படத்தினுடைய மிக மிகச் சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன்” என்றார்.

கதாநாயகி அஞ்சலி பேசும்போது,

“எல்லோருக்கும் லார்ஜர் தன் லைஃப் (Larger than life) படங்கள் அப்படின்னு சில இருக்கும்; நாமும் அப்படி பண்ணினா எப்படி இருக்கும் என்று நினைப்போம். எனக்கு இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ அப்படி ஒரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது, ஆனால் அது இந்த அளவிற்கு வெளிப்படையாக எல்லோரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிவின்பாலி ஒரு அற்புதமான கோ-ஸ்டார். அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே தினசரி எனக்கு ஒரு சேலஞ்ச் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக ஒருவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார், அதற்கு நான் எப்படி பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணிட்டு போற ஆள் இல்லை நான். ஆனால் இந்த செட்டில் நிவின்பாலி குட்டி குட்டி எக்ஸ்பிரஷனில் வந்து அதை கலக்கி எடுத்துடுவாரு. அதனால நானும் என் பங்குக்கு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கணும்; அது ஒரு ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, முதல் நாளே இந்த நிவின்பாலியுடன் என்னால் ஒரு கம்ஃபோர்ட் ஜோன் உருவாக்க முடிந்தது.

சூரியை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது;  குற்றாலத்தில் ஒரு முறை படப்பிடிப்பு நடந்தபோது அங்கே ஒரே ஒரு ட்ரெட் மில் தான் இருக்கும். நானும் சூரியும் ரெண்டு பேருமே ஒர்க் அவுட் பண்ணனும்னு ஆசைப்படுவோம், அதனால் ரெண்டு பேருமே அதிலேயே ஓடுவோம்; ஒரு மாதிரி வேடிக்கையாக இருக்கும். வெளியில போய் கிரிக்கெட் விளையாடவும் செய்வோம். இப்பதான் எனக்கு அதெல்லாம் ஞாபகம் வருகிறது. அவரோட நல்ல மனசுக்கு இப்போது அவர் என்ன சாதித்திருக்கிறாரோ அதற்கு எல்லாமே அவர் மிகத் தகுதியானவர். சூரியின் வெற்றி எனக்கு ரொம்பவே பர்சனலா ஃபீல் ஆச்சு; அவருக்கு இதற்கு மேலும் இன்னும் வெற்றி வர வேண்டும். இந்த படத்தில் நடித்த எலி பற்றி சொல்லத் தேவையில்லை, அதுவும் எங்கள் சக நடிகர்தான்; தேங்க்யூ எலி.

யுவன் எனக்கு ரொம்ப பிடிச்ச மியூசிக் டைரக்டர் மட்டுமல்ல, பாடகரும் கூட. இந்த படத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ பாடல் என் ஃபேவரைட். ‘கற்றது தமிழ்’ படத்திற்கு அப்புறம் எனக்கு இன்னொரு முறை யுவனுடைய இசையில் ‘பறவையே எங்கே இருக்கிறாய்’ எனக்  கேட்கும்போது எனக்கு என்ன ஃபீல் இருந்ததோ, அதே வைப் இந்த பாட்டில் இருந்துச்சு. ராம் சார் – யுவன் காம்பினேஷன் என்றாலே எப்போதுமே மேஜிக்கல் தான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாருக்கு ரொம்பவே நன்றி; காரணம், உங்களுக்கு ஒரு டேஸ்ட், உங்களுக்கும் ஒரு ஆசை இருக்கணும் இந்த மாதிரி ஒரு படம் பண்றதுக்கு. அந்த ஆசை வந்ததால்தான் நாங்கள் இந்த படத்தில் வர முடிந்தது. நீங்கள் இன்னும் இந்த மாதிரி நிறைய கதைகளை தேர்ந்தெடுத்து பண்ணனும் என விரும்புகிறேன்.

ராம் சாரைப் பற்றி பல மேடைகளில் பேசியிருந்தாலும் கூட, என்னுடைய ஒரு வெல்-விஷராகவும் ஒரு மென்டராகவும், ஒரு தந்தையைப் போன்றும் அவரை பல கோணத்தில் நான் பார்த்திருக்கிறேன். இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ராம் சாருக்கு எவ்வளவு இதயத்துக்கு நெருக்கமான படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக எழுதியதற்கு ரொம்ப நன்றி. இப்போ எனக்கு சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆகிவிட்டதால், ’20 இயர்ஸ் ஆப் அஞ்சலி’ அப்படின்னு நிறைய பேர் விஷ் பண்றாங்க” என்றார்.

நடிகர் சூரி பேசும்போது,

 “எல்லோருக்கும் நன்றி! மண்டாடி படத்தின் வெற்றியை தினந்தோறும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டே இருக்கிறேன். அந்த படம் வந்ததிலிருந்து அது ரொம்ப பெருமையா இருக்கு, சந்தோஷமா இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர்களுக்கும், இங்கு இருக்கும் மீடியா நண்பர்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி. நீங்க கொடுத்த இந்த வாய்ப்பையோ, இந்த வெற்றியையோ எதையும் மண்டையில் எடுத்து வச்சுக்கிட்டு விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆடாமல், அந்த வெற்றியை, அந்த மரியாதையை தலை வணங்கி எடுத்து ஓரமா வச்சுட்டு அடுத்த வேலைக்கு நான் எப்பவுமே ஓடிக்கிட்டே இருப்பேன். நீங்களும் என்னை புஷ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.

பொதுவாக முக்கியமான இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், பாலா, மிஷ்கின் இவங்க படங்களில் எல்லாம் நடிக்கணும் அப்படிங்கற ஆசை இருந்துச்சு. அதில் எனக்கு வெற்றிமாறன் அண்ணன் கிட்ட வாய்ப்பு கிடைச்சு அந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். அப்போதுதான் அருண் விஸ்வா மூலமாக எனக்கு ராம் அண்ணன் அறிமுகமானார். அந்த சமயத்தில் தான், ‘இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு, நீங்கள் பண்றீங்களா?’ என்று என்னை நம்பி கூறினார். எனக்கு ஒரு பக்கம் ஆசையாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ‘ராம் அண்ணா ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கான ஏரியா’ என்று சிலபேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அங்கே போனதற்கு பிறகுதான் தெரிந்தது இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது என்று!

ஒரு இயக்குநர் இடத்திலிருந்து அவர் பேசாமல், நார்மலாக ஜாலியாக பேச ஆரம்பிச்சாரு; எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துருச்சு. ‘காமெடி பண்றது சாதாரண விஷயம் இல்லை, ரொம்ப கஷ்டமான வேலை’ அப்படின்னு அவர் பேசப்பேச எனக்கு பயங்கர தைரியம் வந்துச்சு. அப்படித்தான் இந்த படத்துக்குள்ள நான் வந்தேன். வெற்றிமாறனிடம் சொன்னபோது,, ‘தாராளமாக போங்க; இப்ப நம்ம படத்துல ஒன்னு இருக்கு பாத்தீங்களா, அதே மாதிரி அங்க போனீங்கன்னா அங்க ஒன்னு புதுசா கத்துக்கலாம், அது உங்களுக்கு ரொம்ப பெருசா உதவும்’ அப்படின்னு சொன்னாரு.

எப்படா ராம் அண்ணனுடன் சூட்டிங் போகலாம்னு காத்திருந்தேன். முதலில் கூட்டிட்டுப் போனார்கள்; நல்ல ஒரு பெரிய ட்ரெயின் செட், பஞ்சபூதங்களுமே அதை சுத்தி இருந்துச்சு, கூடவே 70 எலியும் இருந்துச்சு! அதுக்குள்ளதான் ஷூட்டிங். இதுல என்ன காமெடினா, அண்ணனே எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நான் டயலாக் பேச ஆரம்பிச்சேன். அப்ப என்ன சொன்னாருன்னா: ‘முதல் ஆக்சன், ரெயினுக்கு (மழை); இரண்டாவது, ட்ரெயினுக்கு; மூன்றாவது ஆக்சன், விண்டோ காற்று வருவதற்கு; நான்காவது, ட்ராலிக்கு; ஐந்தாவது ஆக்சன், காற்று அடிப்பதற்கு; ஆறாவது, தண்டருக்கு (இடி); மின்னல் வருது… அண்ணே எனக்கு எப்போ ஆக்சன் வரும்? ‘இருங்க, இதுதான் ஆர்டர்., ரைட்டு கரெக்ட்டா இருங்க’ன்னு சொல்லுவாரு. ஒன்பதாவது ஆக்சன், அது கூட இல்ல, ஒன்பது எலிக்கு! பத்தாவது ஆக்சன், எங்களுக்கு! இப்படி படப்பிடிப்பு முழுவதுமே ஜாலியாகவும் புதுசாகவும் இருந்தது” என்றார்.

நடிகர் நிவின்பாலி பேசும்போது,

“ரொம்ப ஹேப்பியா இருக்கு! ‘ஏழு கடல் ஏழு மலை’ யூனிட் ரொம்பவே நல்லா போச்சு.. இந்த மாதிரி ஒரு சக்சஸ் எல்லாம் வரும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். இல்ல, சினிமாவில் இன்னும் கமிட்டடா இருக்கணும்; ஆடியன்ஸ் அந்த மாதிரி இருக்கிறார்கள். இந்த அன்பைக் கொடுக்கிறது ஆடியன்ஸ்தான், அப்போ உங்களுக்காக ஒரு நல்ல படம் பண்ணிட்டுப் போகணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு ‘கம் பேக்’ வார்த்தையைக் கேட்டு, இப்ப என்னுடைய பெயரும் கூட அதில் இருக்கு. ‘நிவின்பாலி கம்பேக்’. ‘ பர்சனலா சொல்லணும்னா, எல்லா படமும் கம் பேக் முயற்சி தான்; இப்போ இந்த படமும் ஒரு கம்பேக் டூ தமிழ் சினிமா.. அப்படி இருக்கட்டும்” என்றார்.

இயக்குநர் ராம் பேசும்போது,

“ஏழு கடல் ஏழுமலை’ அக்டோபர் ஒன்றாம் தேதி வருகிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் எலியோ யானையோ மரமோ புல்லோ எல்லாமே உயிர் தான். அதுதான் படத்தில் கதை. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன். அப்ப நாம எல்லாம் எப்படி இருந்தோம் இன்னைக்கு அப்படி இருக்கோமா அப்படின்னு தோணுச்சு. நிறைய மாற்றமாகி இருக்கு. ஆனால் நான் அப்படியே தானே இருக்கிறேன். முதன்முதலில் கற்றது தமிழ் படம் எடுத்தப்ப நா முத்துக்குமார் தான் என்னை யுவன் சங்கர் ராஜா கிட்ட கூட்டிட்டு போனார். ஒரு 30 நிமிஷம் கூட கதை சொல்லி இருக்க மாட்டேன். இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்று தொடங்கிய நட்புதான்.. அவர் நோ சொன்னால்தான் நான் வேறு இடத்துக்குப் போக முடியும். அடுத்த படமும் அவர்தான் பண்றாரு.

அதே சமயம் எங்களுக்கு இடையேயானது வெறும் மியூசிக் டைரக்டர் இயக்குநர் நட்பு அல்ல  நலம் விரும்பிகளின் நட்பு எங்களுடையது.

‘பறந்து போ’ டைம்ல திடீர்னு ஒரு சிச்சுவேஷன் 22 பாட்டு ஆயிடுச்சு. ஆனா அவரு துபாயில் இருக்காரு. அப்ப அவர் நம்ம பிரண்டு சந்தோஷ் தயாநிதி இருக்காரு. அவர வச்சு பண்ணுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு  சொன்னாரு.. இப்ப அதே மாதிரி ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தை எல்லாமே முடிச்சிட்டோம் ஒரு வருஷம் இருக்கு ஆனா நான் மொத்த ஆர்டரை மாத்திட்டேன் அந்த டைத்துல திரும்ப போன அவர் கான்செர்ட்ல இருக்காரு நாங்க இங்க ஓடிடில படம் கொடுக்கணும். அப்பவும் என்ன சொன்னார் என்றால் சந்தோஷ்  கிட்ட போங்க கரெக்டா பண்ணித் தருவாரு அப்படின்னு சொன்னாரு. அந்த வகையில் தன் படத்துக்குள்ள இன்னொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய தன்னம்பிக்கையும் என் மேல் இருக்கக்கூடிய அன்பும் வேண்டுமே.. அவர்கிட்ட இருக்கு” என்று கூறினார்.
Previous Post

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

Next Post

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

Next Post

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

Popular News

  • “வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டோரதி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.