• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜெயிலர் -2 விமர்சனம்

by Tamil2daynews
October 17, 2026
in விமர்சனம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜெயிலர் -2 விமர்சனம்

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் படம் ஜெயிலர் 2

வர்மனை கொலை செய்தது யார்? கடத்தப்பட்ட சிலைகளின் மூன்று கண்டெய்னர்கள் யாரிடம் உள்ளது என்பதை கல்பக் குடும்பத்தினர் (எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி) வர்மனின் நண்பன் திலீப் (சுராஜ்) மூலம் தேடி வருகிறார்கள்.

இவர்களின் தேடல் ஒரு பக்கம் நடக்க, தன்னை சுற்றியும், தன் குடும்பத்தை சுற்றியும் ஏதோ தவறாக நடப்பதை உணரும் டைகர் முத்துவேல் பாண்டியன், தன்னை தேடுபவர்கள் தன் குடும்பத்தை நெருங்குவதற்கு முன், நாம் அவர்களை நெருங்க வேண்டும் என திட்டமிடுகிறார்.

ரஜினியின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக நடக்க, ஒரு கட்டத்தில் சுராஜ் இடத்திற்கே சென்றுவிடுகிறார். சுராஜை வைத்து கல்பக் குடும்பத்தை கண்டுபிடித்து, இந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரையும் முடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

ஆனால், ரஜினி நெருங்குவதற்குள் சிவராஜ் குடும்பத்தை எஸ்.ஜே. சூர்யா கடத்தி விடுகிறார். இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதால், தமிழ்நாட்டிலிருந்து கோவாவிற்கு, அதாவது கல்பக் குடும்பம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார். சிவராஜ் குடும்பத்தை ரஜினி காப்பாற்றினாரா? இந்த சிக்கலில் இருந்து ரஜினி எப்படி தப்பித்தாரா? மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

ரஜினி, ரஜினி, ரஜினி… படத்தில் வரும் பாடல் வரிகள் போல் இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன்தான் என்பது போல், படத்தில், தான் தோன்றிய முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை பட்டையை கிளப்பியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

பணிவாக பேசுவது, கண் பார்வையில் மாஸ் காட்டுவது, ஸ்டைல், வசனங்களை மாஸாக பேசுவது, ஸ்க்ரீன் பிரசன்ஸ், ஆக்ஷன், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலும் ரஜினிகாந்த் வேற லெவல். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சியில், தனது கண்களால் வலியை திரையில் காட்டிய விதம் சிறப்பு.

பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்பை சரியாக செய்துள்ளார். அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். காவாலா பாடல் போன்ற சிறு சிறு விஷயங்களில் டீடைலிங் செய்தது அருமையாக இருந்தது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகளை நமக்கு அழகாக காட்டிய விதம், டார்க் ஹ்யூமர் காட்சிகள், மாஸான கேமியோக்கள் என திரைக்கதையை நன்றாக வடிவமைத்துள்ளார்.

முதல் பாதியின் Fun + மாஸ் = என்டர்டைன்மென்ட் என படத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு. அதே போல் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் + எமோஷனல் ட்ராமாவாக எடுத்து சென்ற விதமும் வேற லெவல்.

வில்லன்களாக வரும் சுராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிற்கு இன்னும் சற்று வெயிட்டேஜ் இருந்திருக்கலாம். ஆனாலும், நடிப்பு அரக்கன் நடிப்பு அரக்கம்தான் என்பதை நிரூபித்துவிட்டார். குறிப்பாக ரஜினியின் வீட்டிற்கு சென்ற, அவரை எமோஷனலாக உடைக்கும் காட்சியில், ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்கிறார். வித்யா பாலன் ரஜினிக்கு எதிராக திமிராகவும், தோரணையோடும் பேசும் விதம் சிறப்பு.

நமோ நாராயணன் + யோகி பாபு + ரஜினிகாந்த் காம்போவில் வந்த நகைச்சுவை காட்சிகள் பிளாஸ்ட். அதிலும் நமோ நாராயணன் வேற லெவல் Fun. மற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் மாஸ் காட்சிகள், எலிவேஷன் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என அனைத்திற்கும் தனது பின்னணி இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார், படத்தின் மற்றொரு ஹீரோ அனிருத். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் படம் பிளாக்பஸ்டர் என்று சொல்லலாம்.

படம் முழுவதும் ரஜினியிசம். அரங்கேரியிருக்கிறது .

கடந்த 50 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னைக்கும் என்னைக்கும் இந்திய சினிமாவில் மாஸ் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அதற்கு ஜெயிலர் 2-வும் ஒரு சாட்சி.

சூரியனை தொட முடியாது,

நட்சத்திரங்களை எண்ண முடியாது,

ரஜினியை  மிஞ்ச முடியாது.

என்ற சொல்லுக்கு ஒரே வார்த்தை இந்த ஜெயிலர் 2 படம் தான்.

76 வயதில் என்ன ஒரு நடை,என்ன ஒரு சுறுசுறுப்பு இதுதான் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் அமர வைக்கின்றது. படம் மாஸ், மாஸ் பக்கா மாஸ்.
Previous Post

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

ட்ரோன்ஸ் – விமர்சனம்

Next Post

ட்ரோன்ஸ் - விமர்சனம்

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.