• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் !

by Tamil2daynews
September 24, 2021
in சினிமா செய்திகள்
0
தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் !
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரைத்துறையில் JSK என அறியப்படும் JSK சதீஷ்குமார், தரமான படங்களில் ஆர்வம் கொண்டவராகவும், தமிழ் ரசிகர்களுக்கு புதிய களங்களில்  வித்தியாசமான படங்களை  வழங்குவதிலும்  சிறந்து விளங்குபவர். 23 சிறந்த திரைப்படங்களை  ரசிரகர்களுக்கு தந்து, திரைத்துறையில்  தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மகத்தான அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான JSK Film Corporation, ராமின் தங்க மீன்கள், குற்றம் கடிதல், இயக்குனர் பாலாவின் பரதேசி, விஜய்சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற கிளாசிக்கல் ஹிட் படங்களை உருவாக்கியுள்ளது. இயக்குனர்களிடமிருந்து தரமான  கதைகளை உள்ளிழுத்து, வெள்ளி திரையில்  மிக நல்ல  சினிமாவை தரும் அவரது திறமை, அவரை இந்திய சினிமா துறையில்  புகழ்பெற்ற தயாரிப்பாளராக ஆக்கியுள்ளது. இது அவருக்கான பாராட்டு அறிக்கை அல்ல, திரைப்படங்கள் மீதான அவரது காதலின், அர்ப்பணிப்பின் அடையாளம் மட்டுமே. திரையில்  இயக்குனர் ராம் இயக்கிய  தரமணி படம் மூலம் ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நீருபித்து அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்தார், அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு, அவருக்கு  பெரிய அளவில் ரசிகர்களிடம்  பாராட்டுக்களைப் பெற்று தந்தது. அப்படத்தை தொடர்ந்து மம்முட்டி நடித்த பேரன்பு மற்றும் கபடதாரி ஆகிய படங்களில்  அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிந்தைய திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் டோலிவுட்டிலும் நடிகராக அறிமுகமானார். கபடதாரியில் அவர் முக்கியமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார். இது அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல பிரபல்யத்தை பெற்று தந்தது.  அண்மையில் தமிழில் வெளியான ‘ஃபிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் வில்லனாக  அவரது சிறந்த நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.  அவரது சிறந்த நடிப்பிற்காக பார்வையாளர்கள் அவரை பெருமளவில்  பாராட்டினார்கள். அடுத்தடுத்த படங்களில் ஒரு நடிகராகவும்  தயாரிப்பாளராகவும்  JSK திரையுலகில் தொடர்ந்து கலக்கவுள்ளார்.
எல்லா மொழிகளிலும் சமமான பிரபல்யத்தை கொண்டிருக்கும் பன்முகதன்மை கொண்ட குணசித்திர நடிகர்களுக்கு, திரைப்படத் துறை எப்போதுமே சிறப்பான இடத்தை தந்துள்ளது. அவர்கள் எந்த ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அவரகளது நடிப்பு, மக்களின் மனங்களை வெல்வது உறுதி.  JSK அந்த வகையில் ஒரு நடிகராக தனது சிறப்பான நடிப்புதிறன் மூலம் தற்போது ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளார். அவரின் ஈடுபாடும் ஆர்வமும் இங்கே மதிக்கப்படுகின்ற வகையில், திரைத்துறையில் நிரந்தரமான சிறந்த நடிகராக அவர்  என்றென்றும் இங்கே நிலைபெற்று இருப்பார்.
இயக்குநர் நவீனின் “அக்னி சிறகுகள்”, வசந்த பாலனின் “அநீதி” ஆகிய படங்களில்  JSK  மிக முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார். இது தவிர, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்துள்ள,  விரைவில் வரவிருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் அவர் வில்லனாக  நடித்துள்ளார்.
நடிகராக  வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தனக்கு பொருத்தமான, நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் JSK.
Previous Post

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் இயக்குநர் மோகன் ஜி நம்பிக்கை

Next Post

தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி படம் நிறைவடைந்தது

Next Post
தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி படம் நிறைவடைந்தது

தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி படம் நிறைவடைந்தது

Popular News

  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜன-12ல் வெளியாகும் ‘மதகஜராஜா’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.