• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பொண்ணு  மாப்பிள்ளை’ படத்திற்கு இயக்குநர் பார்த்திபன் வாழ்த்து!

by Tamil2daynews
November 26, 2021
in சினிமா செய்திகள்
0
‘பொண்ணு  மாப்பிள்ளை’ படத்திற்கு இயக்குநர் பார்த்திபன் வாழ்த்து!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிறிய படமானாலும் பெரிய மனதுடன் பார்த்திபன் வாழ்த்து கூறிய படம் ‘பொண்ணு  மாப்பிள்ளை’
மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் மகேந்திரனின் ‘ பொண்ணு மாப்பிள்ளை ‘
இப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரை தயாரித்திருக்கிறார்கள்.
படத்திற்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் பதினாறும் (Collection)பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் என்று
தயாரிப்பாளர்கள் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரையை வாழ்த்தியுள்ளார்.கதாநாயகனாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.
காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘மகேந்திரனின்  பொண்ணு மாப்பிள்ளை’
இப்பொழுது கிராமங்கள் மாறிவிட்டன  .கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் காலத்துக்கேற்ற கிராமத்துக் காதல் கதையாக  உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.
இப்படத்தை
சேட்டிபாலன்  எழுதி இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன்  நாயகனாகவும் புதுமுகம் ரூபிகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.  சத்யன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, நந்தகுமார் ,ஆர்த்தி ,நெல்லை சிவா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.இயக்குநர் சேட்டிபாலனும் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி கூறும்போது,
“நான் கிராமத்திலிருந்து ஒரு இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தேன்.ஆனால் சந்தர்ப்ப வசத்தால் நான் தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டேன். இந்த சினிமாவில் 25 ஆண்டுகாலம் சுமார் 40 படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறேன்.’நேசம்’, ‘ஏழ்மையின் சிரிப்பில் ‘, ‘சபாஷ்’ போன்ற இயக்குநர் கே.சுபாஷின் படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். இப்படி அவரிடம் நான் 12 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். கின்னஸ் சாதனை படைத்த ‘சுயம்வரம்’ படத்திலும் பணியாற்றியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ‘சமஸ்தானம்’, ‘பாபா’ , ‘கஜேந்திரா’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.  இத்தனை படங்களில் பணியாற்றிய அனுபவத்தில்  ஒரு தயாரிப்பு நிர்வாகியாக இருந்து ஒரு படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையிலான படத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து சினிமாவைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்த எனக்கு ஒரு படத்தைத் தயாரிக்க, இப்போது காலம் கனிந்துள்ளது.
 நாங்கள் நண்பர்கள் சேர்ந்து கிரவுட் பண்ட் மூலம் தயாரிப்பதாக இருந்தோம். பலரும் அதில் இறங்கத் தயங்கவே நானே துணிந்து இறங்கி இந்த படத்தைத் தயாரிக்கிறேன்.
இயக்குநர் சேட்டி பாலன்  கூறிய படத்தின் கதை எனக்குப் பிடித்துப் போனதால் அவரை இயக்க வைத்து இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறேன் .படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் தூத்துக்குடி மணப்பாடு பகுதிகளிலும் மற்றும் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எடுத்து முடித்திருக்கிறோம்.
எனக்குத் தயாரிப்பு நிர்வாகியாக அனுபவம் இருந்ததால்
57 நாட்களில்
ஒரு நாளையும் வீணாக்காமல்  நேரத்தைப் பொன்னாக மதித்துப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு எம். ராஜேந்திரன். இசை ஏ.ஜே.அலிமிர்ஸாக்.இவர் எங்கள் படம் வெளி வருவதற்குள்  ‘வாத்தியார் கால்பந்தாட்ட குழு ‘ உட்பட மூன்று படங்களில் இசையமைத்து வருகிறார் . பாடல்கள்- சேட்டிபாலன்.எடிட்டிங் வி.எம். உதயசங்கர். கலை -ஞானம்.
முதல் படம் என்பதால் பொருட்செலவினைப் பற்றிக் கவலைப்படாமல் சரியாகத் திட்டமிட்டு படத்தை முடித்து இருக்கிறோம்.
எங்கள் கனவையும் உழைப்பையும் அங்கீகாரம் செய்யும் வகையில் இயக்குநர் பார்த்திபன் சார் அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்தியிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பார்த்திபன் சார் அவர்களுக்கு எங்கள் நன்றி.” என்கிறார் தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி.
 இந்தப் படம் 2021 டிசம்பர் வெளியீடாக வெளிவர இருக்கிறது.
Previous Post

*RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:*

Next Post

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

Next Post
நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.