• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் !

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் !
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இணையத்தில் தனது புதுமையான மற்றும் பெருங்களிப்பு தரும் குறும்பு நிகழ்ச்சிகளுக்காக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ப்ராங்ஸ்டர் ராகுல். பெரிய திரைகளில் தோன்றியதன் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்கும் அதிர்ஷ்டம் அவருக்கு கிடைத்துள்ளது. வேலன் திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரம் கிடைத்ததில்,   நடிகர் முகன், சூரி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகிய முக்கிய  நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் பெரு மகிழ்ச்சியிலுள்ளார்.

ப்ராங்ஸ்டர் ராகுல் கூறும்போது.., “
“வேலன்” படத்தில் எனக்கு இவ்வளவு முக்கியமான கதாபாத்திரம் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே கூத்தும், கும்மாளமுமாகவே  இருந்தது. சூரி சாரின் அற்புதமான நகைச்சுவை உணர்வு எங்களை முழுவதுமாக மகிழ்வித்தது. திரையில் நான் தோன்றும் வகையில் அதிக காட்சிகளைக் கொடுத்த, வேலன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் நான்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், முகென் சிறந்த திறமைகளைக் கொண்ட ஒரு அற்புதமான நபர். ஏற்கனவே குடும்பப் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்த அவர், இந்தப் படத்தின் மூலம் மேலும் உயரங்களுக்கு செல்வார். மீனாட்சி கோவிந்தராஜன், பிரிஜிடா மற்றும் அனைத்து நடிகர்களும் ஒருவருக்கொருவர் நடிப்பிலும், ஆதரவளிப்பதிலும் மிகச் சிறந்தவர்கள். பிரபு சார் ஒரு  ஜென்டில்மேன், அவர் ஏன் வயதைக் கடந்த பார்வையாளர்களால் நேசிக்கப்படுகிறார் என்பதை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர் இயல்பிலேயே மிகவும் கண்ணியமாகவும், அன்பாகவும், நட்பாகவும் இருக்கிறார், இது அவரது திரை கதாபாத்திரங்களின் நேர்மறையை பிரதிபலிக்கிறது. எனக்கு ஒரு அழகான திரைப்படம் மற்றும் கதாப்பாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சார் மற்றும் இயக்குனர் கவின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேலன் ஒரு அழகான குடும்ப திரைப்படம், நிச்சயமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப பார்வையாளர்களுக்கு விருப்பமான திரைப்படமாக இருக்கும்.

இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ள வேலன் திரைப்படத்தை, Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

 

Previous Post

சிகரங்களை தொடும் வருண் !

Next Post

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

Next Post
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

Popular News

  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.