

“படப்பிடிப்புக்கு போன இடத்தில் பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்த சந்தானம் !”
மரியாதை நிமித்தமா ? அரசியல் ஏதுமா .?!
சந்தானம் கதாநாயகராக நடித்த ‘இனிமே இப்படித்தான் ‘பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் இயக்கத்தில்., சந்தானம் நடிக்கும் இன்னமும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு ., பாண்டிச்சேரி பகுதியில் சமீபமாக தொடங்கி தொடர்ந்து வருகிறது.
இதன் படப்பிடிப்பிற்காக நேற்று, 17-12-2021 அன்று, பாண்டி சென்ற சந்தானம் அண்ட் கோவினர் ., பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மலர்கொத்து மாலை மரியாதை செய்துவிட்டு அதன் பின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைராலாகி வருகிறது.
இப்படத்தை , சந்தானம் நாயகராக நடித்து சமீபமாக திரைக்கு வந்த ‘சபாபதி’ படத்தயாரிப்பாளரும் , சந்தானத்தின் நண்பருமான ரமேஷ்குமார் தனது ‘ஆர் கே எண்டர்டெயின்மென்ட் ‘ பட நிறுவனம் மூலம் அடுத்து, தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது !
படப்பிடிப்புக்கு போன சந்தானம் படக்குழுவினர் பாண்டி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சொல்லப்பட்டாலும் ., இந்த சந்திப்பிற்கான காரணம் அரசியல் ரீதியாகவும் ஏதும் இருக்கலாம்…. என்றும் பேசுகிறார்கள்