• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது!

by Tamil2daynews
September 19, 2021
in சினிமா செய்திகள், செய்திகள்
0
ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு

 

மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது :

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், ஏன்? இல்லாமல்கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரை விட பெருசில்லை. உங்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கா? நீங்க நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாத்தையும் மனசுவிட்டு பேசிடுங்கள்.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள்.

தற்கொலை.. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.. என்று முடிவு பண்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்திற்கு நீங்க கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துடாதீங்க.

நான் அத்தனை எக்ஸாம்ல ஃபெயில் ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க்ஸ் வாங்கியிருக்கேன். அதுனால உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும்.
மதிப்பு, தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால், எல்லோரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம்.

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

—

Previous Post

மணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.

Next Post

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்

Next Post
பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் ‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் 'ஹனு-மான்' முதல் பார்வை போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.