• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை ; தீர்ப்புக்கு பின்னரும் உருகும் விஜய் விஷ்வா*

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
*மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை ; தீர்ப்புக்கு பின்னரும் உருகும் விஜய் விஷ்வா*
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
பட்டதாரி படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற தகவலும் வெளியானது. திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் ஆனால் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும்  காவல்துறையில் புகார் அளித்தார் மிர்னா மேனன்.
அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அந்த புகாரில் கூறியிருந்தார் மிர்னா மேனன். இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மேனன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன் கொடுத்த அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்தார் மிர்னா மேனன். தற்போது டிசம்பர் 22 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது
இதுகுறித்து நடிகர் அபிசரவணன் இன்று மீடியாக்களை அழைத்து தனது இருப்பு குறித்த விபரங்களை தெரிவித்தார்.
“எனக்கும் மிர்னா மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன் அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் வீட்டிலும் கூறினார்கள்.
மிர்னா மேனனின்  பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.. அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.
கடந்த 2018 நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், என்னை விட்டு மிர்னா மேனன் விலகி விட்டார். அதன் பின்னர் அது குறித்து விசாரிக்க சென்றபோதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது  சுமத்தினார்
இரண்டு வருடத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை நான் சந்தித்தபோது  எனக்கும் எனது மனைவிக்குமான பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகி கொண்டிருக்கிறேன் என்றும்  எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்பதால் .அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றும்  கூறினேன் இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் அது குறித்த விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்..
அபி சரவணனுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை நாங்கள் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தோம் ஆனால் அவர் போலியான திருமண சான்றிதழை காட்டி என்னை மிரட்டுகிறார் என்று என்னையும் சமூகம் சம்பந்தமான எனது பணிகளையும் கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் மிர்னா மேனன். இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அந்த நிலையில் அவர் என் மனைவிதான் என்பதற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தேன். ஆனால்   அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மிர்னா மேனன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதிதி மேனன் மீது நான் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு முகாந்திரங்கள் இருக்கிறது என்றும் இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டு மிர்னா மேனன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பில் மிர்னா மேனனும் நானும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்..
அபி சரவணனும் நானும் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ள மிர்னா மேனன் எதற்காக தன்னுடைய கடன் விண்ணப்ப பத்திரங்களில் தன்னுடைய கணவர் பெயர் அபி சரவணன் என்று குறிப்பிட்டுள்ளார்..
எனக்கு தமிழ் தெரியாததால் அபி சரவணன் பல டாக்குமெண்ட் களிலும் வெற்று பேப்பர்களிலும் கையெழுத்து பெற்றுக்கொண்டார் என்று மிர்னா மேனன் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல.. ஒரு பொறியியல் பட்டதாரியான அவர் இப்படி எந்த ஒரு டாக்குமெண்டையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
நாங்கள் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்ந்ததை நேரடி சாட்சியாக கண்ட எனது பெற்றோர் மற்றும் தனது வீட்டில் வேலை பார்த்த நபர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் மிர்னா மேனனோ இந்த திருமணம் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் தன் தரப்பு சாட்சிகள் எதையுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை
இப்படி சில காரணங்களை கூறி மிர்னா மேனன்  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் எனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தீர்ப்பும் தற்போது கிடைத்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன்  என்னுடன் தான் வாழவேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.. ஆனால் அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன்.. ஏனென்றால் என் காதல் உண்மையானது.. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்று கூறினார் அபி சரவணன்.
மேலும் அவர் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட முப்பது முறை வாய்தாவுக்காக நீதிமன்றம் சென்று வந்துள்ளேன். அந்த சமயங்களில் எல்லாம் பல இளைஞர்கள், இளம் தம்பதியினர் கணவன்-மனைவியாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து அந்த வழக்கை சந்திப்பதற்காக வரிசையில் நிற்பதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணத்திற்கு பிறகும் அதே காதலை தொடர வேண்டும் என்பதுதான் நான் இப்போது சொல்ல விரும்பும் விஷயம்..
அதேபோல கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்சனைகளை அவர்களை பேசி தீர்த்துக்கொண்டால் இது போன்ற வழக்குகளுக்கு வேலையே இருக்காது. சமூகத்தில் அவர்களது பெயருக்கும் களங்கம் ஏற்படாது. எனவே விவாகரத்து செய்ய நினைப்பதற்கு முன் கணவன் மனைவியர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வது தான் நல்லது என்றும் கூறியுள்ளார் அபி சரவணன்.
Previous Post

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்:

Next Post

படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’*

Next Post
படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’*

படுக்கை சொல்லும் கதை ; வித்தியாசக் கோணத்தில் உருவாகியுள்ள ‘தி பெட்’*

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.