• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம்  குடும்பங்களுக்கு இடையேயான உறவையும், சகோதரத்துவத்தையும் மீட்டெடுக்கும் – நடிகர் சேரன் !

by Tamil2daynews
December 23, 2021
in சினிமா செய்திகள்
0
“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம்  குடும்பங்களுக்கு இடையேயான உறவையும், சகோதரத்துவத்தையும் மீட்டெடுக்கும் – நடிகர் சேரன் !
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகில் வெகு சில திரைப்படங்கள்,  உறவுகளுக்கு புத்துயிர் கொடுப்பதிலும், நட்பைப் பிணைப்பதிலும், பல சமயங்களில், பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாகவும் இருந்துள்ளன. பாண்டவர் பூமி, ஆனந்தம், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில், படத்தின் காட்சி முடிந்த உடனே, பார்வையாளர்கள் திரையரங்குகளிலேயே  அமர்ந்து, குறைந்த பட்சம் தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளுக்கு, நெருங்கியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியையாவது அனுப்பிய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அம்மாதிரி படங்கள் தருவதில் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் சேரன், ஒரு நடிகராகவும் திரைப்பட இயக்குநராகவும் அவரது படங்களில் பார்வையாளர்கள்  உணர்ச்சிகளின் குவியலுக்கு உள்ளாவார்கள். அவர் எப்போதும் தூய்மையான பொழுதுபோக்கு அமசங்கள் மற்றும் இதயத்தை வருடும் பாத்திரங்களில் மட்டுமே தோன்றியிருக்கிறார், அது இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு “  படத்திலும் தொடர்கிறது. டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் அவர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் சேரன் கூறியதாவது… “ஆனந்தம் விளையாடும் வீடு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, சிறப்பு வாய்ந்ததொரு படைப்பு, இதை நான் வெறும் கருத்துக்காக சொல்லவில்லை, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அதை மனதிற்குள் உண்மையாக உணர்ந்தார்கள். படப்பிடிப்பின் போது நான் என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்த்திருந்தாலும், இப்படத்தை முடித்து திரையிட்ட போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. திரையில் நான் தான் நடித்துள்ளேன் என்பதையே மறந்துவிட்டேன், சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இதே அனுபவம் தான் இருந்தது. இத்திரைப்படத்தின் இயக்குநர் இயக்குநர் நந்தா பெரியசாமி நிகழ்த்திய மாயாஜாலம் இது. அவர் ஒரு வெற்றிகரமான திரைப்படத் இயக்குநராக வர வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறேன், அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் தூணாக இருந்த தயாரிப்பாளர் ரங்கநாதன் சாருக்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பின் போது அவர் சந்தித்த தொற்றுநோய் போன்ற கடுமையான சவால்களை வேறு எந்த தயாரிப்பாளரும் தாங்கியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இவரைப் போன்ற தயாரிப்பாளர் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். கௌதம் கார்த்திக்  மிகவும் அன்பான மனிதர். அவர் குணத்தில் மிகவும் அரிய பண்பை கொண்டிருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் நவீன நகர்ப்புற பையன் மற்றும் கிராமத்து பையன் என இரண்டு கேரக்டரிலும் ஜொலிக்கும் திறமை இருப்பதில்லை, ஆனால் இது அவருக்கு மிக எளிதாக பொருந்தி போகிறது. நடிகை ஷிவாத்மிகா எனக்கு மகள் போன்றவர். அவளுடைய தொழிலின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். சரவணன், விக்னேஷ், அல்லது படக்குழுவில் யாராக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம், முழு படப்பிடிப்பும் எனக்கு சொர்க்கமாக இருந்தது. திரையரங்குகளிலும் இந்த மனமுழுக்க பரவும் இன்ப அதிர்வை பார்வையாளர்கள் உணருவார்கள். ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்களுக்கிடையேயான பிணைப்பையும், சகோதரத்துவத்தையும் புதுப்பிக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தை, Sri Vaari Film P. ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா, சூப்பர்குட் சுப்ரமணி, VJ கதிரவன், மௌனிகா, “மைனா” சுசானே, பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார், பொர்ரா பாலபாரணி ஒளிப்பதிவு செய்கிறார், படத்தொகுப்பை என் பி ஸ்ரீகாந்த் கவனிக்கிறார். சாஹு (கலை), ஹரி தினேஷ் (ஸ்டன்ட்), தினேஷ்-ராதிகா (நடன அமைப்பு), சினேகன் (பாடல் வரிகள்), மற்றும் முருகன் (காஸ்ட்யூமர்) ஆகியோர் இந்தப் படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

Previous Post

ஜீ5 ஒரிஜினல் படம் – ‘பிளட் மணி’ (Blood Money)  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! 

Next Post

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

Next Post
ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.