• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்

by admin
February 4, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மரியாதைக்குரிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,

‘இளையராஜா 75’ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசை பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால் தான் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. பத்மவிபூஷன் இளையராஜா விற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும். என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மரியாதைக்குரிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,

‘இளையராஜா 75’ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசை பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால் தான் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. பத்மவிபூஷன் இளையராஜா விற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் என்றார்.

தலைவர் விஷால் பேசும்போது

எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான்.

அவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூர பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால் கூட அவருடைய பாடல்கள் தான் பயணத்தை இனிமையாக்கும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதில் பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.

இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெரும் வசனம் தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டுபிடுத்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம்பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம்பெறுவார்கள்.

இதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா. நீங்கள் இந்த இரண்டு நாளும் ஒரு சிறந்த இசை விருந்தை சுவைக்கப் போகிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு இறுதுணையாக இருக்கும் சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி. எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரு. பன்வாரிலால் புரோஹித் மிகச் சிறந்தவர். அவரைப் பற்றி தவறான வதந்திகளை செய்திதாள்களில் படிக்கிறோம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளைத் தவறாமல் செய்து வருகிறார். அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விழாவிற்கு வருகை தந்து, விழாவை துவக்கி வைத்த ஆளுநருக்கு நன்றி.

வெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெரும்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது :-

என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளையராஜா பேசும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம் தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார். என்றார்.

மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க இளையராஜா பாடினார் என்றார்.

மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க இளையராஜா பாடினார்.

Tags: 2A R RahmanIlayarajaஇளையராஜாஏ ஆர் ரகுமான்
Previous Post

Petta – Aaha Kalyanam Official Video

Next Post

சிவகார்த்திகேயன் நடிப்பில் “மிஸ்டர் லோக்கல்”!

சிவகார்த்திகேயன் நடிப்பில் "மிஸ்டர் லோக்கல்"!

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.