• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம்  “சினம்” ! 

by Tamil2daynews
November 4, 2019
in சினிமா செய்திகள்
0
அருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம்  “சினம்” ! 
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


தமிழ் சினிமாவில் சமீபமாக  வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும்  வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.


சினம் எனும் வலிமை மிகுந்த  தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது…

எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும்  கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல  விசயங்களில்  சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் GNR குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் முதல் நாள் முதல் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது. நவமபர் 8 முதல் இப்படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைன் செய்கிறார். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.

Tags: Arun VijaySinam
Previous Post

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்

Next Post

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

Next Post
நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

Popular News

  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.