• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கனா தர்ஷனுக்கு ஜோடியாகும் அருண்பாண்டியனின் மகள்!

by admin
February 18, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
கனா தர்ஷனுக்கு ஜோடியாகும் அருண்பாண்டியனின் மகள்!
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கனா புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் கீர்த்தி. இவர் வேறு யாருமல்ல, நன்கு அறியப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள்.

கீர்த்தி கூறும்போது, “பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை” என்கிறார்.

சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் எளிதாக சினிமா கதவுகள் திறந்து விடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால் கீர்த்தி விஷயத்தில் அப்படியில்லை. “நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியன் அவர்களுக்கு விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். சினிமாவுக்குள் நுழைந்தாலும் அவருக்கு மேடை நாடகங்கள் உடன் உள்ள பிணைப்பு குறையாது என்பதில் உறுதியாக இருக்கிறார். “அப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பெரிய மேடை நாடகத்தை தயாரிக்க இருக்கிறேன்” என்கிறார்.

இந்த காமெடி அட்வென்சர் திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். கனா புகழ் தர்ஷன் உடன் இணைந்து விஜய் டிவி தீனாவும் நடிக்கிறார்.

“ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என அதை பிரித்து பார்க்க நான் விரும்பவில்லை, மூன்று பேரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறோம் என்கிறார் கீர்த்திபாண்டியன். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். இந்த படத்தில் VFX மற்றும் CGI ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

Tags: Arun PandiyanKeerthy
Previous Post

Sarasalaya’s 70th Year Platinum Jubilee Event Still

Next Post

Aghavan Audio & Trailer Launch Stills

Next Post
Aghavan Audio & Trailer Launch Stills

Aghavan Audio & Trailer Launch Stills

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.