• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது

by Tamil2daynews
April 3, 2022
in சினிமா செய்திகள்
0
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் வம்சி- ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ப்ரீ லுக் வெளியானது

தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா, செம ஹிட்கள் அடித்த இயக்குநர்  வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான  ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின்  ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது.

விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட,, அதே சமயம் வணிக ரீதியாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் இக்கூட்டணியின் மிக பிரம்மாண்டமான இப்படத்தை பெரும்பொருட்செலவில் தயாரிக்கிறது..

டோலிவுட்டின் மிக விஷேசமான பண்டிகையான உகாதியை  முன்னிட்டு இப்பபடத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் தேஜ் நாராயண் அகர்வால் வெளியிட்டார்,

பின்னால் அதிவேகமாக ரயில் வந்துகொண்டிருக்க…உயிரை துச்சமாக மதித்து கையில் சாட்டையுடன் ரவி தேஜா நின்று கொண்டிருக்கும் காட்சி உள்ளபடியே பிரமிப்பை உண்டாக்குகிறது.  ரவி தேஜா சட்டையின்றி நின்று தனது கம்பீரமான உடலைக் காட்டிக்கொண்டு  நிற்பது அவர் ஏதோ அதிரடியான ஆக்‌ஷனில் இறங்கக் காத்திருக்கிறார் என்று கட்டியம் கூறுகிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் அற்புதமான பின்னணி இசையுடன் மோஷன் போஸ்டரும் வெகுஜனத்தை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. இந்த மோஷன் போஸ்டரின் காட்சிகள் உயர்தரம்.

ரவி தேஜாவின் உடல் மொழி, வசனம் மற்றும் கெட்அப் ஆகியவை ,முன்னெப்போதும் செய்யாத  முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்துக்கு அவர் தயாராகியிருப்பதை உறுதி செய்கின்றன. . இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர்  நடிக்கின்றனர்.
’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் பிரமாண்டமான வெளியீட்டு விழா இன்று மாதப்பூர், எச்ஐசிசியில் உள்ள நோவடெல்லில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்கிறார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளர். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
நிறுவனம் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனங்கள்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
Previous Post

ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

Next Post

சசிகுமாரின் ‘காரி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

Next Post
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!

சசிகுமாரின் ‘காரி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.