ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் வழங்கும், SP Cinemas வெளியீட்டில், அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !

by Tamil2daynews
May 27, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

K4 Kreations தயாரிப்பாளர் கேசவன் வழங்கும்,SP Cinemas வெளியீட்டில்,அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம்  ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது  !

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனைகள் செய்து புகழ்பெற்று விளங்கும்  திரு.கேசவன், தமிழ்த் திரையுலகில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தயாரிப்பாளராக  ‘வேழம்’ படம் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குனராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்படத் இயக்குநராகவும் பரந்த அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், வணிக ரீதியாக எண்ணற்ற உள்ளடக்கம் சார்ந்த, வெற்றிகரமான பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரித்து, விநியோகித்த SP Cinemas, ‘வேழம்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளது. “வேழம்”  திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது பன்முகத் திறமையை  ஒவ்வொரு திரைப்படத்திலும், நிரூபித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். வேழம் (யானை) விலங்கின் வலுவான நினைவாற்றலைக் தலைப்பில் குறிப்பிட்டது போல, படத்தின் கதாநாயகனும் அதே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார். முழு திரைப்படமும் இந்த கருத்தைச் சுற்றியே சுழல்கிறது மற்றும் இந்த திரைப்படம் ஒரு அழுத்தமான திரைக்கதையை கொண்டுள்ளது.

படத்தில்  மேலும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே ஆகியோருடன்  இன்னும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஜானு சந்தர் (இசை), சக்தி அரவிந்த் (ஒளிப்பதிவு), A.K. பிரசாத் (எடிட்டர்), சுகுமார். R (கலை இயக்குனர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), M.சரவண குமார் (ஒலி கலவை), சுரேஷ் சந்திரா & ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு).

SP Cinemas இந்தியா உட்பட இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்று ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுதும் வெளியிடுகிறது.

Previous Post

முத்துநகர் படுகொலை’-ஐ தமிழகத்தில் திரையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி செய்ய வேண்டும் – மேதா பட்கர்

Next Post

’கிரிமினல்’ படத்துக்கு ஒடிடி நிறுவனங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் – தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்பிக்கை

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

’கிரிமினல்’ படத்துக்கு ஒடிடி நிறுவனங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்பிக்கை

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Actress Preethi Sharma Photoshoot Stills

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 announces first ever virtual reality based thriller series “PUBGOA”

    0 shares
    Share 0 Tweet 0
  • சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!