• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

by Tamil2daynews
April 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

 

‘இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது’ என்று தொடங்கிய ஒன்று… இப்போது உங்களை சொல்ல வைக்கிறது – அதுதான் கர்ஜனை.

நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ்  இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல… மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்…

அந்த அறிவிப்பு போஸ்டரில் …விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர்.

இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் சக்தி வாய்ந்த குழு…
ஒவ்வொருவரும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் …

ஒவ்வொருவரும் முக்கியமானவர் ‌.. ஒவ்வொருவரும் வலிமையானவர்… இந்த போஸ்டர் திரைப்பட அறிவிப்பை பற்றியது மட்டுமல்ல.. அவர்கள் அனைவரும் ஒன்றிணையும் போது மட்டுமே சாத்தியமாகும் ஒன்றை உருவாக்குவதை பற்றியது. இந்தக் குழு ‘தட்ஸ் எ ரோவர் ‘என்ற தலைப்பில் இப்படத்திற்கான ஒரு தீம் பாடலையும் வெளியிட்டுள்ளது.

வாழ்க்கை உங்கள் மீது எதை எறிந்தாலும்… மன உறுதியுடன் இருப்பதை பற்றியது. இந்த தீம் பாடல். … ஒருவர் எப்படி வலி, போராட்டங்கள் மற்றும் தோல்விகளை எதிர்கொண்டாலும் …மீண்டும் எழுந்து தொடர்ந்து முன்னேற முடியும் என்பதை இது உணர்த்துகிறது. சக்தி வாய்ந்தவராக இருக்க… உங்களுக்கு புகழும், அங்கீகாரமும் , தேவையில்லை .என்றும் இது கூறுகிறது. கைவிடாமல் இருப்பதிலிருந்து தான் உண்மையான வலிமை வருகிறது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் அது கடினமானதாக இருந்தாலும் அது தான் உங்கள் உண்மையான கர்ஜனை ஆகும்.

இந்த படம் ஒரு இணையான – புராண பிரபஞ்சத்தில் உள்ளது. பழமையானதாக தோன்றும். ஆனால் முற்றிலும் கற்பனையான ஒரு உலகம்… பரிட்சயமானது. ஆனால் முற்றிலும் தனித்துவமானது இது. புராணங்களின் ஆன்மாவிலிருந்து உத்வேகம் பெறுகிறது. ஆனால் அவற்றால் கட்டுப்பட மறுக்கிறது.

சர்வதேச அளவிலான தர நிலைகளை நிர்ணயித்து எதிர்பார்ப்புகளை வானுயர உயர்த்தும் ஒரு முழுமையான வெற்றிப் பாடல். பெரிய உலகளாவிய பெயர்கள் குழுவில் இணைவதால் விஜய் தேவரகொண்டாவும் உலக அளவில் செல்வதற்கு தயாராக உள்ளனர் . மேலும் இந்த படத்தை பற்றிய அனைத்தும் முற்றிலும் அசத்தலாக தெரிகிறது.

முன்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா- இந்திய சினிமாவில் மிகவும் ஆற்றல் மிக்க மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர்… தொடர்ந்து மாறுபட்ட மற்றும் சவாலான கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற விஜய் ஒவ்வொரு படைப்பிலும் தனது எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தீவிரமான மற்றும் காட்சி அளவில் பிரமாண்டமான ஒரு தளத்திற்குள் அவர் அடி எடுத்து வைப்பது போல் தெரிகிறது. இது அவரது பயணத்தில் மற்றொரு மாபெரும் பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது.

Hi Nanna” படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அவர்களின் இதயங்களை வென்ற இயக்குநர் சௌர்யுவ் தற்போது ஆழமும் பிரம்மாண்டமும் நிறைந்த ஒரு கதையின் மூலம் தனது கலை பார்வையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.  வைரா (Vyra)  நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகும் இந்த திரைப்படம் அவரது முந்தைய படைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எல்லைகளைக் கடந்து நிற்கும் கதைகளை சொல்ல வேண்டும் என்ற அவரது லட்சியத்தை பிரதிபலிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மிகச்சிறந்த படைப்பாளிகளின் ஒரு அரிய சங்கமமாக அமைகிறது. ஒவ்வொரு துறையிலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களால் வழிநடத்தப்படும் ஒரு அபூர்வ கூட்டணியாகவும் இது திகழ்கிறது.

இப்படத்தை உண்மையிலேயே தனித்துவம் ஆக்கி காட்டுவது அதன் சர்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்ப குழுவே ஆகும். Alejandro Martinez (ஒளிப்பதிவாளர்) ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் ஃபால் அவுட்

போன்ற உலளாவிய படைப்புகளுக்காக அறியப்படுபவர். இவர் இந்த படத்திற்கு ஒரு சர்வதேச ரீதியிலான காட்சி மொழியை கொண்டு வருகிறார்.

சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளர், ‘அனிமல்’, ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் பல படங்களின் பிரம்மாண்டமான காட்சி உலகங்களை உருவாக்கிய படைப்பாற்றல் மிக்க கலைஞர்.

Eric Durst ( VFX மேற்பார்வையாளர்) – ‘காட்ஸ் ஆஃப் எகிப்து’, ‘பேட்மேன் பார் எவர் ‘ஸ்னோபிர்சர் ( Snowpiercer) போன்ற படங்களின் பின்னணியில் செயல்பட்டவர்.

ஹேஷாம் அப்துல் வஹாப் (இசை அமைப்பாளர்)  இந்தியாவின் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இசையமைப்பாளர்களில் ஒருவர்.

பிரவீன் ஆண்டனி (படத் தொகுப்பாளர்)- விறுவிறுப்பான கதை கலங்களை செதுக்குவதில் வல்லவர்.

சச்சின் லோவாலேக்கர் (ஆடை வடிவமைப்பாளர்) தனது வரவில் புகழ்பெற்ற பல படைப்புகளை கொண்டவர்.

இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரே பல விசயங்களை உணர்த்துகிறது. விஜய் தேவரகொண்டாவும்  சௌர்யுவ்வும் ஒரு அணியை முன் நின்று வழிநடத்துகின்றனர். அந்த அணியினர் தங்கள் துறையில் வல்லமை மிக்க போர் வீரர்களை போல் காட்சியளிக்கிறார்கள்.

பல்வேறு திரை துறைகள் மற்றும் புவியியல் எல்லைகளில் இருந்து திரட்டப்பட்ட திறமையாளர்களுடன் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சலான முயற்சியாக இந்த படம் உயர்ந்து நிற்கிறது.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா

தொழில்நுட்ப குழு :
எழுத்து& இயக்கம் ; சௌர்யுவ்
ஒளிப்பதிவு – அலெக்சாண்டர் மார்ட்டினஸ்
தயாரிப்பு வடிவமைப்பு : சுரேஷ் செல்வராஜன்
வி எஃப் எக்ஸ் மேற்பார்வை : எரிக் டர்ஸ்ட்
இசை :ஹேஷாம் அப்துல் வகாப்
படத்தொகுப்பு : பிரவீண் ஆண்டனி
ஆடை வடிவமைப்பு:  சச்சின் லோவாலேக்கர்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)
Previous Post

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

Next Post

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

Next Post

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.