தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஒரு படத்தின் ட்ரைலரே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, சமகால அரசியல்+சினிமா பிரமுகர் குறித்த கதை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உமாபதி இயக்கத்திப் நட்ராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் TN 2026 தங்க நட்சத்திரம்.
அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆன தம்பி ராமையா நட்ராஜ் வளர்ச்சிகாக தன் சொத்தை விற்று முன்னேற்ற, அவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆகிறார்.
இதனால் கொந்தளித்து குல்கந்த் குமாராம நட்ராஜ் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார், 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க, அது நடந்ததா இல்லை குல்கந்துக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.நட்ராஜ் கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மைல் கல் தான், ஒரு நடிகரின் வளர்ச்சியையும், அவர் வளர்ந்த பிறகு எப்படி மாறுவார் என்பதையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து கலக்கியுள்ளார், அதிலும் இடைவேளையில் போலிஸ் தடுக்க அவர் இறங்கி நடந்து வரும் காட்சி எல்லாம் ரசிக்க வைக்கின்றார்.
தம்பி ராமையா நட்ராஜுக்கு காட்பாதராக வந்து, கடைசியில் அவரையே தலைவர் என அழைப்பது நாம் கோடம்பாகத்தில் நாம் பார்த்த பல முகங்களை நியாபகப்படுத்துகிறார்.
படத்தின் முதல் பாதி குல்கந்த் குமார் எப்படி வளர்ந்து உச்சம் தொட்டு, அரசியலுக்கு வருகிறார் என்பதே விறுவிறுப்பாகவே செல்கிறது, ஆனால், இரண்டாம் பாதி தற்போது நடக்கும் பல நிகழ்வுகளை நியாபகப்படுத்தினாலும் சுற்றி சுற்றி கதை ஒரே இடத்திலேயே சுற்றி கொஞ்சம் திரைக்கதை தொய்வாகிறது.
ஆனால், இப்படி ஒரு களத்தையும் கதாபாத்திரத்தையும் உருவாக்கி அதை தைரியமாக எடுத்ததற்கு தம்பி ராமையா, உமாபதியை பாராட்டலாம். டெக்னிக்கலாக ஒளிப்பதிவு OK ரகம் என்றாலும் தர்புகா சிவாவின் பின்னணி இசை சூப்பர்.
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளிவந்த அமைதிப்படை படத்தின் ஞாபகம் நிறைய இடங்களில் வந்தாலும் இன்றைய காலகட்டத்தில் 25 வருடங்களாக தமிழக மக்களை நடிகர்களும் அரசியல்வாதிகளும் ஏமாற்றி வரும் விஷயங்களை தோலுரித்துக் காட்டியதற்கு படத்தின் மிகப்பெரிய பலம்.
பெயரிலேயே இருக்கும் தங்க நட்சத்திரம் வெள்ளி திரையிலும் ஜொலிப்பான்.









