• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

by Tamil2daynews
April 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

 

காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது.

இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர்.  இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளது.  ஏப்ரல் 24 அஜித்- ஷாலினி ஜோடியின் திருமண நாளை முன்னிட்டு இந்தப் படம் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும் அதே சமயம் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது.

‘அமர்க்களம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி காதல், தீவிரம் மற்றும் மறக்க முடியாத பல நினைவுகளையும் கொண்டிருக்கிறது. அஜித்தின் ஈர்க்கும் நடிப்பு, ஷாலினியின் மனதை கவரும் நடிப்பு, பரத்வாஜின் ஆன்மாவை வருடும் இசை என இவை அனைத்தும் ‘அமர்க்களம்’ படத்தை கிளாசிக்காக மாற்றியிருக்கிறது. தற்போது அதே மேஜிக் 4கே டிஜிட்டல் வடிவத்தில் பெரிய திரையில் மீண்டும் வருகிறது. முதன் முறையாக படம் வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ அதே வெற்றியையும், ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…’ பாடல் வரிகள் தலைமுறைகள் தாண்டி இன்றைய காதலுக்கும் பொருந்திப் போகிறது. அதேபோல் ‘சத்தமில்லாத’ பாடலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சக்திவாய்ந்த குரலும், அஜித் குமாரின் வலுவான நடிப்பையும் மீண்டும் பெரிய திரையில் காணத் தவறாதீர்கள். இன்றளவும் இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் அன்றைய ரசிகர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் ஒரே அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடேசன் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடுகிறார்.

25 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை நிறைவு செய்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது வெறுமனே ரீ-ரிலீஸ் மட்டுமல்ல, அது நினைவுகளின் திருவிழா, காதலின் கொண்டாட்டம்!

Previous Post

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

Next Post

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Next Post

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட "தீயோர் கூடம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.