admin

admin

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் ‘குடிமகன்’

  “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.  விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர்.  அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களைசந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.  அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்சத்தீஷ்வரன்.  இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக“ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில்நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல்  தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய்”

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய்”

M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர்...

நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

"அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்" என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டிய இருக்கிறது. சென்றவாரம்...

மீண்டும் இணையும் சிபி சத்யராஜ் மற்றும் தரணிதரன்!

மீண்டும் இணையும் சிபி சத்யராஜ் மற்றும் தரணிதரன்!

கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கும் அது ஒரு 'பாதுகாப்பான பந்தயம்' என்பதை தாண்டி, 'வலுவான பந்தயம்' என்று சொல்லலாம். அந்த வகையில்,...

நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல்!

நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல்!

பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு! தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ்...

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி

'தேவா'வில் விஜய்யுடனும், 'வான்மதி'யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம்...

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய்.

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் “கருத்துக்களை பதிவு செய்.

M பிக்சர்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும்   “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம்...

தனது பிறந்தநாளை தமிழரசன் படப்பிடிப்பில் கொண்டாடிய ரம்யா நம்பீசன்!

தனது பிறந்தநாளை தமிழரசன் படப்பிடிப்பில் கொண்டாடிய ரம்யா நம்பீசன்!

ரம்யா நம்பீசன் தனது பிறந்த நாளை தமிழரசன் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்  

கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்..கதாநாயகனாக மைத்ரேயா நடிக்கிறார்!

கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்..கதாநாயகனாக மைத்ரேயா நடிக்கிறார்!

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது. இந்தப்படம்...

ஆதி ஹன்சிகா இணையும் பார்ட்னர்

ஆதி ஹன்சிகா இணையும் பார்ட்னர்

’பார்ட்னர்’க்காக ஒன்று சேர்ந்த ஆதி - ஹன்சிகா! RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான "பார்ட்னர்" என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம்,...

Page 51 of 74 1 50 51 52 74

Recent News

error: Content is protected !!