ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும், விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

by Tamil2daynews
April 8, 2022
in சினிமா செய்திகள்
0
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும், விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

 

 

நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில்   வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை  மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன்,இணைந்து  பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போரா மற்றும் S விக்ரம் குமார் ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை உடன் இணைந்து, Lotus Pictures சார்பில் சித்தார்த்தா சங்கர் மற்றும் அசோக் குமார்  உடன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குனர் பாலாஜி குமார் கூறுகையில்..,

கொலை திரைப்படம்  1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. இப்படத்தின் இறுதி திரைக்கதை பிரதிக்கு முன்  30 மாதிரி வரைவுகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது, கதையை  நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற இந்த தேவை இருந்தது.  படத்தின் சாராம்சம் பற்றி அவர் மேலும் கூறுகையில்.., “கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது மேல்தட்டு குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில் , ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டி விரும்புவர்களாக இருக்கிறார்கள். அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார். இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். மர்மத்தைத் தீர்க்கும் வல்லவராக அவர் இருக்கிறார். ரித்திகா சிங் இப்படத்தில் சந்தியாவாக நடிக்கிறார், அவர் தனது உயரதிகாரியான விநாயகின் கீழ் வேலை செய்து வழக்கின் மர்மங்களை கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும்.

விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தின்  முதன்மை பாத்திரங்களில்  நடிக்க, ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா ஆகியோருடன் மற்றும் பல  முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னதாக விடியும் முன், மற்றும் 9 லைவ்ஸ் ஆஃப் மாறா போன்ற படங்களை இயக்கிய பாலாஜி குமார் ‘கொலை’ படத்தை எழுதி இயக்கியுள்ளார், . சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு (விடியும் முன், இறுதி சுற்று, என்ஜீகே, இறைவி புகழ்), R.K.செல்வா படத்தொகுப்பு (சார்பட்டா பரம்பரை, கர்ணன், பரியேறும் பெருமாள், மூக்குத்தி அம்மன்) ஆகியவற்றைக் கையாள்கின்றனர். இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். முன்னதாக, அவர் விடியும் முன், மெரினா, நெற்றிக்கண், அவள் மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த இசைக்காக பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

‘கொலை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Infiniti Film Ventures நிறுவனமும், விஜய் ஆண்டனியும் ஏற்கனவே ‘கோடியில் ஒருவன்’ படத்தில்  இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ‘ரத்தம்’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் இந்த இரண்டு படங்களும்  ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சைபர் க்ரைம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுசி கணேசனின் ‘தில் ஹே கிரே

Next Post

“இடியட்” ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”..!

Next Post
ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music இணைந்து கிராமி விருதை தங்களின்  ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக வென்றுள்ளார்கள்,

"இடியட்" ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு"..!

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023
சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 22, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!