• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பஹிரா” டிரெய்லர் வெளியீட்டு விழா !

Bharathan Pictures R.V.Bharathan Presents Prabhu Deva starrer Adhik Ravichandran directorial “Bagheera”

by Tamil2daynews
October 9, 2021
in சினிமா செய்திகள்
0
“பஹிரா” டிரெய்லர் வெளியீட்டு விழா !
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

Bharathan Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,  நடிகர் பிரபுதேவா பல வேடங்களில் கலக்கியுள்ள படம்  “பஹிரா”. தமிழில் அரிதாக வெளியாகும் சைக்கோ கில்லர் வகை பாணியில்,  வித்தியாசமான களத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ளது. படக்குழுவினர், எண்ணற்ற திரைபிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிக்கை, ஊடகத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் முதலில் தயாரிப்பாளர் S.V.R.ரவி சங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கலை இயக்குநர் சிவா யாதவ் பேசியதாவது…
இயக்குநர் ஆதிக் எல்லாமே வித்தியாசமாக கேட்பார் என தெரியும்.  ஆனால் படத்தில் வரும் சின்ன கண்ணாடி முதல் எல்லாத்திலும் வித்தியாசம் செய்துள்ளார். எல்லாரும் வித்தியாசமாக யோசித்தால் இயக்குநர் சைக்கோத்தனமாக யோசிப்பார் படமும் வித்தியாசமாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இசையமைப்பாளர் கணேசன் சேகர் பேசியதாவது…
முதல் முறையாக இன்று விழா  மேடை ஏறியுள்ளேன். இப்படத்தில் தயாரிப்பு தரப்பிலிருந்து முழு சுதந்திரம் கிடைத்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இசையமைக்க முடிந்தது. ஆதிக் உடன்  இணைந்து பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக, மகிழ்ச்சியாக இருந்தது. ஜீ வி பிரகாஷிடம் தான் நான் வேலை பார்த்தேன் அவர் தான் ஆதிக் என்னை இசையமைப்பாளர் ஆக்குவார் என்றார். இப்போது அது உண்மையாகிவிட்டது. அவருக்கு நன்றிகள். எனது இசைக்குழுவினருக்கு நன்றிகள் எல்ல்லோருக்கும் நன்றி.


நாயகி ஜனனி ஐயர் பேசியதாவது ….
இங்கு இன்று இவ்விழாவில் கலந்துகொண்டு பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆதிக் படங்களில் எண்டர்டெயின்மென்ட் கண்டிப்பாக இருக்கும் அதே போல் இப்படத்திலும் முழுமையான பொழுதுபோக்கு இருக்கும். என்னிடம் எனது பாத்திரம் சிறிது தான் என்றார்கள் ஆனால் பிரபுதேவா சாருடன் நடிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டேன். படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

 


நாயகி சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது ….
கோவிடுக்கு பிறகு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இத்தனை பெரிய நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து, தயாரித்த  தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் நாயகிகள் ஒன்றாக நடிக்கவில்லை ஆனால் எல்லோரையும் இங்கு பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபுதேவா சாரை சின்ன வயசிலிருந்தே பிடிக்கும். அவருடன் பழகும்போது அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரால் தான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியும். அவருக்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். ஆதிக் யோசிப்பது எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக இந்தப்படத்தை எல்லாரும் ரசிப்பீர்கள் நன்றி.


நாயகி சாக்‌ஷி பேசியதாவது ….
இரண்டு வருட கடுமையான உழைப்பு இப்போது திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. ஆதிக் 7 நாயகிகளை வைத்து எப்படி படமெடுப்பீர்கள் என்று கேட்டேன் ஆனால் அட்டகாசமாக செய்துவிட்டார். இந்தப்படம் முழுக்க எஞ்சாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். பிரபுதேவா சாருடன் இணைந்து நடிப்பது ஒரு கனவு, அது நனவாகிவிட்டது. அவரது நடிப்பு பார்க்க பிரமிப்பாக இருந்தது. அனைவருக்கும் நன்றி


நடிகை காயத்திரி பேசியதாவது…
இப்போதைய காலகட்டத்தில் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகள் நடப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஒரு வகை ஜானரில் இருக்கும். அதை உடைக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும். பிரபுதேவாவின் சிக்குபுக்கு ரயிலேவுக்கு அனைவருமே ரசிகர்கள் தான். அவருடன் இணைந்து ஆடியது மகிழ்ச்சி அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.

 


நடிகை அம்ரிதா தஸ்தர் பேசியதாவது..
இப்படத்தை நம்பிய பரதன் பிலிம்ஸ்க்கு நன்றி. என்னை தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர் ஆதிக் அவர்களுக்கு நன்றி. பிரபுதேவா சார் இதில் அசத்தியுள்ளார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

 

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது..,
மிக சின்ன கதாப்பத்திரம் என்றாலும் மனதில் பதியும் பாத்திரம். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்க்கு நன்றி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்


நடிகர் சாய்குமார் பேசியதாவது…
நான் சிவாஜி சாரின் ரசிகன், பிரபுதேவா, ஆதிக் என் பெற்றோர்கள் என  எல்லோரும் எதாவது சாதிக்க வேண்டும் என திரையுலகிற்கு வந்தார்கள். அவர்களது ஆசிர்வாதம் இன்று பலித்துள்ளது. கமல் சார் தவிர அனைத்து சூப்பர்ஸ்டார்களுக்கும் தெலுங்கில் டப் பேசியுள்ளேன். அதற்கு ஆண்டவனுக்கு நன்றி. பிரபுதேவா சாருக்கு நானும் ரசிகன். படத்தில் அவரது நடனம் பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் ரிலாக்ஸான படமாக இருக்கும். தியேட்டருக்கு வாருங்கள் கொண்டாடுங்கள் நன்றி.

இசையமைப்பாளர், நடிகர் ஜீ வி பிரகாஷ் பேசியதாவது…
இந்தப்படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், ஆதிக் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிரபுதேவாவிற்கு இது முற்றிலும் புதிதான படம். ஆதிக் எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பார். இது என்ன வகை ஜான்ரென்று யாரும் கணிக்க முடியாது. இந்தப்படத்தை காண ஆவலாக உள்ளேன் நன்றி


கலைப்புலி தாணு பேசியதாவது…,
பஹிரா என்றால் என்னவென்று கேட்டேன் இது கருஞ்சிறுத்தை என்றார்கள். பிரபுதேவா திரையில் ஆடிய மின்னல் ஆட்டம், அவர் இன்னும்  பெரிய இடத்திற்கு செல்வார் எனக் கூறுகிறது. சிக்கு புக்குக்கு ஆடியதை விட இரண்டு மடங்கு, ஆடுகிறார்.  இந்தப்படம் தியேட்டரில் வசூல் மழை பொழிய வாழ்த்துக்கள். ஆதிக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தேனாண்டாள் முரளி பேசியதாவது…
படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள், ஆதிக் எப்போது படம் செய்தாலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவார். இப்படத்தின் டிரெய்லரே பெரிய எதிர்பார்ப்பை தருகிறது. பிரபுதேவா ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமாக செய்து வருகிறார். நான் கல்லூரி காலம் முதல் அவரை பார்த்து வருகிறேன். அவர் ஒரு பிராண்ட்.  இப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பற்றி கூறும்போது…
கொரோனாவால் இரண்டு வருடம் யாரையும் சந்திக்கவில்லை. நாம் திரும்பி வரும்போது ஒரு வித்தியாசமான படைப்புடன் வரவேண்டும் என நினைத்தேன். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இவ்வளவு பிரமாண்டமாக இருக்க பரதன் பிலிம்ஸ் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. நான் உதவி இயக்குநராக இருக்கும் போது, சத்யம் தியேட்டரில் ஒரு ஆடியோ லான்ச் வந்தேன் கூட்டத்தால் உள்ளே விடவில்லை, அப்போது என் படத்தின் அனைத்து விழாக்களும் இங்கு நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். இப்பொது நடப்பது மகிழ்ச்சி. என் முதல் படத்தில் வேலை செய்த போதே, கணேசன் சேகரிடம் நான் பெரிய இயக்குநர் ஆனவுடன்  உன்னை இசையமைப்பாளராக ஆக்குவேன் என்றேன். அது இப்படத்தில் நடந்துள்ளது. இப்படத்தில் யாருமே நாயகிகள் இல்லை எல்லாருக்கும் முக்கியமான பாத்திரம் இருக்கிறது. நாயகி அம்ரிதா தஸ்தர் தமிழ் தெரியாவிட்டாலும் அருமையாக நடித்துள்ளார். என் வாழ்வின் வெற்றிக்கு காரணம் என் தந்தைதான். இந்தப்படம் உருவாக முழுக்காரணம் பிரதேவா மாஸ்டர் தான். இந்தப்படத்தின் ஆத்மா அவர் தான். நான் என்ன சொன்னாலும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டு செய்தார். என் மீது நம்பிக்கை வைத்த மாஸ்டருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இப்படம் என்ன ஜானர் என்று எனக்கும் தெரியாது நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள். எனக்கு முதன் முதலில் வாய்ப்பு தந்த ஜீ விக்கு நன்றி.

நடிகர் மோகன் வைத்யா பேசியதாவது..
சேது படத்தில் என்னை பார்த்த எல்லோரும் நன்றாக நடித்துள்ளதாக வாழ்த்தினார்கள் ஆனால் எனக்கு எந்த ஷீல்டும் கிடைக்கவில்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் ஆதிக் என்னை ஆலிஸுக்கு அழைத்து, இனி நீங்கள் எங்கள் கம்பெனி ஆர்டிஸ்ட் என்றார். அவருக்கு என் நன்றி. பிரபு தேவா மிக எளிமையானவர் மிக இயல்பாக பழகிய அவருக்கு நன்றி.

நடிகர் பிரபுதேவா பேசியதாவது….
என் மீது அன்பைத்தரும் தரும், எல்லாருக்கும் என் அன்பு. பரதன் பிலிம்ஸ் பற்றி சொல்ல வேண்டும், மேன்மக்கள் மேன்மக்களே என்பது  போல் அவ்ரகள் க்ரேட். ஒரு ஹெலிகாப்டர் கேட்டால் கூட முருகன் ஓகே சொல்லிவிடுவார் அப்படியான ஒருவர். சினிமாவுக்கு தேவையானவர். ஆதிக் என்னென்ன  நினைத்தாரோ அதையெல்லாம் என்னை வைத்து பண்ணிவிட்டார். ஆதிக் ஒரு சிறந்த நடிகர். அவர் நடித்து காட்டுவது அட்டகாசமாக இருக்கும். இது என்ன ஜானர் என்று தெரியவில்லை என்றார்கள் இது ஆதிக் ஜானர் அவ்வளவுதான். இசை அற்புதமாக இருந்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். சாய்குமார் 1000 படம் செய்துள்ளார் கிரேட். ஜனனி நடிப்பதை பார்த்து பிரமிப்பாக இருந்தது. அடுத்து காயத்திரி பார்த்தாலும் அட்டகாசமாக நடித்தார். எல்லோருமே நன்றாக நடித்தார்கள். சோனியா அகர்வால் எனக்கு முன்பே தெரியும் அவருடன் லேடி கெட்டப்பில் நடித்துள்ளேன். அம்ரிதா தஸ்தர் தமிழே தெரியாமல் மிரட்டலான நடிப்பை தந்துள்ளார். உங்கள் அனைவர் ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை நன்றி.

தயாரிப்பாளர் R.V. பரதன்  பேசியதாவது…
இங்கு வந்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இப்படத்திற்காக கடுமையாக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தில் நேம் கார்டில் மட்டும் தான் என் பெயர் இருக்கிறது. ஆனால் அனைத்து வேலைகளையும் பார்த்தது என் அப்பா தான். தொடர்ந்து தமிழ் தயாரிப்பாளர்களுக்கு உதவி புரிந்து வரும் என் தந்தை RV அய்யாவுக்கு நன்றி. இந்தப்டம் கண்டிப்பாக நன்றாக வரும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.

Bharathan Pictureத்s சார்பில் R.V. பரதன்  B.A,B.L மற்றும்  S.V.R.ரவி சங்கர் ஆகிய  இருவரும் இணைந்து, இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அனேகன் படப்புகழ் அமீரா தஸ்தர் நாயகியாக நடித்துள்ளார், ரம்யா நம்பீசன், யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர்,  சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், காயத்திரி என பெரிய நடசத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம்- ஆதிக் ரவிச்சந்திரன்
இசை – கணேசன் சேகர்
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமனுஜம்
படத்தொகுப்பு – ரூபன்
கலை இயக்கம் – ஷிவ யாதவ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர், அன்பறிவு
நடனம் – “பாபா”  பாஸ்கர்
பாடல்கள் – பா.விஜய்
உடை வடிவமைப்பு – NJ.சத்யா
மேக்கப் – குப்புசாமி
புகைப்படம் – சாரதி
விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஹரிஹர சுதன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – P.பாண்டியன்
டிசைன்ஸ் – D stage
டைட்டில் டிசைன் – சிவக்குமார்
தயாரிப்பு – R.V. பரதன்  B.A,B.L மற்றும்  S.V.R.ரவி சங்கர்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D one

Previous Post

ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″

Next Post

“வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்”

Next Post
“வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்”

"வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்"

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.