• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Skyman Films  International தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் “வேலன்” திரைப்படம் ! 

by Tamil2daynews
February 20, 2021
in சினிமா செய்திகள்
0
Skyman Films  International தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் “வேலன்” திரைப்படம் ! 
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை, மொத்தமாக  கொள்ளையடித்த முகேன் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக்  Skyman Films  International  நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை  தயாரிக்கிறார்.  இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
ஒரு அழகான காதலை காமெடியுடன் கலந்து  சொல்லும்  இப்படம், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாகிறது. கலைமகன் முபாரக்  Skyman Films  International  நிறுவனம் சார்பில் “வேலன்” படத்தினை மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறார்.
Skyman Films  International  தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது…
குடும்பமாக இணைந்து பார்க்கும், அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள். குடுமபங்களை இணைக்கும் எந்த விதமான கதைகளும் சிறப்பானதாகவே இருக்கும். இன்றைய உலகில் குடும்பங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, நேர்மறை அம்சங்களை சொல்ல வேண்டியது நமது கடமை. அறிமுக இயக்குநர் கவின் பிரபல இயக்குநர் சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. மிக அழகாக படத்தினை உருவாக்கி வருகிறார். மிக உற்சாகமான இளமை துள்ளலுடன் இருக்கிறார் நடிகர் முகேன் அது அவரது நடிப்பிலும் அற்புதமாக  வெளிப்பட்டிருக்கிறது. அழகான தேவதை போன்று இருக்கிறார்  நடிகை மீனாக்‌ஷி. பிரபு அவர்களும் சூரி அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பினை நல்கியுள்ளார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியினை தந்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. படக்குழுவினர் அயராத உழைப்பினை தந்து வருகின்றனர். படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.
இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி
நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா A பிள்ளை மற்றும் K.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் வசனமெழுதியுள்ளனர். சிற்றரசு புகைப்படங்கள் பணிகளை செய்துள்ளார். மேக்கப்  பணிகளை N.சக்திவேல் செய்ய,
R.ராஜசேகர், NA.அன்பரசு இணை இயக்கம் செய்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை
சுரேஷ் சந்திரா செய்துள்ளார்
புரடக்சன் மேனேஜராக காணூர்  நிர்மல் குமார் பணியாற்ற,
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக J.P. விக்ரம் பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை, முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Previous Post

மக்கள் மத்தியில் கலக்கும் மை டியர் ராட்சசி  பாடல்!!

Next Post

“No.6 Vaathiyar Kaalpandhaatta Kuzhu”

Next Post
“No.6 Vaathiyar Kaalpandhaatta Kuzhu”

“No.6 Vaathiyar Kaalpandhaatta Kuzhu”

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பில் அவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Dont Trouble The Trouble – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026

“என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

October 3, 2026

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.