ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ராம் பொத்தினேனியின் புல்லட் பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !

by Tamil2daynews
June 16, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ராம் பொத்தினேனியின் புல்லட் பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !

இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ‘தி வாரியர்’ எனும் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் மூலம்  தனது ரசிகர்களை மகிழ்விக்க கலக்கலாக தயாராகி வருகிறார் உஸ்தாத் ராம் பொத்தினேனி. இப்படத்திலிருந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் முதல் சிங்கிள் பாடலான  புல்லட்  பாடல் வெளியாகி யூடியூப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் யூடியூப்பில்  வெளியான புல்லட் பாடல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது,  இப்பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சார்ட்பஸ்டர் பாடல் மொழி கடந்து  ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கவர்ந்துள்ளது.  இணையத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளியாகும்  ரீல்கள் பாடலின் வெற்றியை நிரூபிக்கின்றன. இப்பாடலில் ராம் பொத்தினேனியின் அழகான மெட்டுகளை நடனத்தை ரீல்கள் வழியே  மீண்டும் உருவாக்க அனைவரும் முயற்சிக்கின்றனர்.

Bullet Song Lyrical | The Warriorr | Ram Pothineni | Lingusamy | Simbu (STR)| Krithi Shetty | DSP - YouTube

இப்பாடலில் சிம்புவின் குரல், டிஎஸ்பியின் மாஸ் பீட்ஸ், ராம் பொதினேனியின் அட்டகாசமான அசைவுகள் என அனைத்தும்  இணைந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அனைவரும் இந்தப் பாடலைப் பலமுறை  மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர், மேலும் இப்பாடல் சமீபத்தில் மோஜ் ஆப்பில் 6 பில்லியனைத் தாண்டியுள்ளது.

டிஎஸ்பி மற்றும் எஸ்டிஆர் இருவரும் முறையே தங்கள் தனித்திறமையில்  பாடலை மிக அற்புதமான வகையில் உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில் ராம் பொத்தினேனி தனது நடன அசைவுகளால் பாடலை வெகு உற்சாகமான ஒன்றாக மாற்றியுள்ளார். பாடலில் அவருடன் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார். பாடல் வீடியோவில் கூட பாடலின் பிரமாண்ட மேக்கிங் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

ராம் பொத்தினேனி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் நமக்காக என்ன வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள் மட்டுமே. இரண்டாவது சிங்கிளான தாடா தாடா, ஒரு இனிமையான மெல்லிசை பாடலாக, அனைவரையும் மயக்குகிறது. இப்பாடலின் புகழ் எந்த நேரத்திலும் குறையாது என்று தோன்றுகிறது. இந்த பாடலுக்கு இந்தியா முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படம் ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது, இது கோலிவுட்டில் ராமின் அறிமுக திரைப்படமாகும். கமர்ஷியல் கிங் N லிங்குசாமி இந்த இருமொழி ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தை இயக்கியுள்ளார். படம் பெரிய திரைக்கு வரும்போது திரையரங்குகளில் ஒரு அதிரடி திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Srinivasaa Silver Screen சார்பில் ஶ்ரீனிவாசா சிட்தூரி, தயாரிக்க பவன்குமார் வழங்குகிறார். இந்த படத்தில் ஆதி பினுஷெட்டி பயங்கரமான வில்லனாக நடிக்கிறார். அக்ஷரா கவுடா இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில்  நடிக்கிறார்.

 

Previous Post

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

Next Post

“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” – ஆர்.ஜே.பாலாஜி

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” - ஆர்.ஜே.பாலாஜி

Popular News

  • நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆந்திரா அரசியலில் குதிக்கும் நடிகர் விஷால்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கனல்”படத்தின் இசை விழா சுவாரசியங்கள்..!

June 29, 2022

அடுத்தடுத்து வரலாற்று படங்களில் நடிக்கும் கோமல் சர்மா

June 29, 2022

ஆந்திரா அரசியலில் குதிக்கும் நடிகர் விஷால்..!

June 29, 2022

இந்த ஆண்டின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படமான “விக்ரம்”, ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

June 29, 2022

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

June 29, 2022

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு இதுதான் காரணமா..?

June 29, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.