• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” – ஆர்.ஜே.பாலாஜி

by Tamil2daynews
June 16, 2022
in சினிமா செய்திகள்
0
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த  ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” – ஆர்.ஜே.பாலாஜி

குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் இந்த வகை படங்களுக்கு புத்துயிர் தருவதாக இருக்கும். இத்திரைப்படம், ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி படம் பற்றி கூறுகையில்..,
‘பதாய் ஹோ’ இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக போற்றப்படுகிறது, மேலும் அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. நாங்கள் அதன் ரீமேக்கில் வேலை செய்யத் தொடங்கியபோது, அதை ரீமேக் செய்யாமல், நமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல், இங்குள்ளவர்களுக்கு ஏற்றவாறு செய்ய நினைத்தோம். Zee Studios & Bayview Projects LLP தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் Romeo Pictures ராகுல் உட்பட அனைவரும் வீட்ல விஷேசம் படத்தின் இறுதி வடிவத்தில் மிகவும் திருப்தியாக உள்ளனர். சமீபத்தில், ஜீ ஸ்டுடியோஸ் குழு உறுப்பினர்கள் மும்பையில் படத்தைப் பார்த்தனர், தொலைபேசி மூலம் அவர்களின் கைதட்டலைக் கேட்டது உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. வீட்ல விஷேசம் எங்கள் மொத்த குழுவினருக்கும் பெரும் திருப்தியை அளித்துள்ளது. N.J.சரவணன் இந்தத் திரைப்படத்தின் வலுவான தூணாக இருந்துள்ளார். அவர் இப்படத்தை என்னுடன் இணைந்து இயக்கியுள்ளார். அவரது ஈடுபாடு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சத்யராஜ் சார், ஊர்வசி மேடம், அபர்ணா பாலமுரளி மற்றும் நட்சத்திர பட்டாளத்தில் உள்ள அனைவருமே இந்த படத்தின் ஆன்மா. அவர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் படம் முழுவதையும் கலகலப்பாக்கியிருக்கிறார்கள்.

விரைவில் படம் வெளியாவது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்து கூறும்போது..,
வீட்ல விசேஷம் 100% ஃபேமிலி என்டர்டெய்னர் என்பதால், 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் பிற கல்வித் தேர்வுகள் முடிந்த பிறகு வெளியிட நினைத்தோம். தவிர, இந்தப் படத்தை குடும்பத்தினரும் நண்பர்களும் ரசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே ஜூன் 17 அன்று வெளியிட முடிவு செய்தோம். உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும்.

வீட்ல விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்),ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

நடிகர் ராம் பொத்தினேனியின் புல்லட் பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !

Next Post

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

Next Post
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட்  சி – சாப்டர் 2’

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.