• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் !

by Tamil2daynews
May 18, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த  அதிரடி வெப் சீரிஸ்  ஆரம்பம் ! 

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube  தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த  வெப் சீரிஸாக சாதனை படைத்த  “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும்  “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.

Blacksheep உடைய சொந்த OTT-யான “Bs value”க்காகத் உருவாக்கப்படும் இந்த தொடரை இயக்குநர் அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன்யை கடந்ததோடு, இது YouTube  தளத்தில்  அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.  மேலும் இந்த தொடர் “என்ன சொல்ல போகிறாய்” புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில்  பாராட்டப்பட்ட நடிகராக வலம் வருவதோடு, அன்பு டிஜிட்டல் உலகத்தில் தனது எழுத்து மற்றும் இயக்கத்திற்காக வெறித்தனமான ரசிகர்களையும் கொண்டிருக்கும் அன்புதாசன் பெரிய அளவில் இயக்குனராக பரிணமிக்கும் படைப்பாக இது இருக்கும்.  Blacksheep உடைய பல புனைகதை மற்றும் புனைகதை அல்லாத தொடர்களில் குறும்புத்தனம் மற்றும் அசத்தலான நடிப்பு மூலம், லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில், ஏற்கனவே பிரபலமாக இருந்த சேட்டை ஷெரிப் இதில்  ஹீரோவாக நடிக்கிறார்.

‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும், இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அமேசான் பிரைம்  ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த கதை நாயகன் கிருஷ்ணாவை (சேட்டை ஷெரீப்) சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு  நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது .

இத்தொடர் ஆகஸ்ட் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, நேற்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன், இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தின் தொழில்நுட்ப குழு, 
நவநீத கிருஷ்ணன் (இணை இயக்குனர்), ஷஷாங்க், மகிமை, நித்யா, லோகேஷ்வரி( உதவி இயக்குனர்கள்). சரவணன் & நர்மதா (எழுத்தாளர்கள்), ஃப்ரெட்ரிக் விஜய் (ஒளிப்பதிவு), டார்வின் அஜய் (கேமரா அசிஸ்டண்ட்), பிரதீப் (கலை இயக்கம்), ஹரி ( SFX), நிசாம் (DI), அர்சத், இர்ஷத்(டிசைன்ஸ்), அசார்(நடனம்), நரேஷ்-கிஷோர்(எக்ஸிகியூடிவ் புரடியூசர்).
Previous Post

தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா !

Next Post

புதிய முயற்சிகளுக்கு தமிழ்த் திரை உலகில் எப்போதும் ஆதரவு உண்டு ! இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

புதிய முயற்சிகளுக்கு தமிழ்த் திரை உலகில் எப்போதும் ஆதரவு உண்டு ! இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.