ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது

by Tamil2daynews
April 27, 2022
in சினிமா செய்திகள்
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது

 

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்

மும்பை, இந்தியா—26 April, 2022 —அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.
Saani Kaayidham' gears up for OTT releaseதனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில்,

“இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்..

பிரபல இயக்குனர் செல்வராகவன் கூறுகையில்,
“இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் சாணி காயிதம் எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும். திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குனர், அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், கலை இயக்குநராக ராமு தங்கராஜ், எடிட்டராக நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்   சித்தார்த் ரவிப்பட்டி .

பிரைம் வீடியோ கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் சாணி காயிதம் திரைப்படமும் இணைகிறது. இதில் கெஹ்ராயியான், ஷேர்ஷா, சர்தார் உதம், ஜெய் பீம், குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, கூலி நம்பர்1, துர்காமதி, சலாங், சூரரைப் போற்று, வி சியூ சூன், நிசப்தம், ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளஸ்மெலடிஸ், மாறா, பீமசேனா நளமஹாராஜா, மனே நம்பர் 13 பென்குயின், லா, சுபியும் சுஜாதாயும், பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி மற்றும் பல அடங்கும். அதோடு பெஸ்ட் செல்லர், இன்சைட் எட்ஜ் சீசன் 3, மும்பை டைரீஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான்- செம காமடி பா,ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ், பண்டிட்ஸ், தாண்டவ், பாதாள் லோக், மிர்சாபூர் சீசன்1 மற்றும் 2, தி ஃபர்காட்டன்- ஆசாதி கே லியே, சன்ஸ் ஆப் சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, இன்சைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகிய Amazon Original தொடர்களும் போராட் சப்சிகியுவன்ட் மூவி பிலிம், தி வீல் ஆப் டைம், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளும் அடங்கும். இவை அனைத்தும் Amazon பிரைம் உறுப்பினர்களுக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றிக் கிடைக்கிறது. இந்தச் சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும்  திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலி மூலம் பிரைம் உறுப்பினர்கள் எங்கும் எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். Prime உறுப்பினர்கள் பிரைம் வீடியோ செயலி மூலம் எபிசோடுகளைப் பதிவிறக்கலாம் மற்றும் அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். ஆண்டுக்கு ₹1499 எனும் கட்டணம் கொண்ட பிரைம் மெம்பர்ஷிப்புடன் பிரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றிக் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் இது குறித்து www.amazon.in/prime-இல் மேலும் அறியலாம்

Previous Post

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்

Next Post

நடிகை “திரிஷா” நடிக்கும் உண்மை சம்பவம்..!

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

நடிகை "திரிஷா" நடிக்கும் உண்மை சம்பவம்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

July 5, 2022

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

July 4, 2022

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

July 4, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.