நடிகை “திரிஷா” நடிக்கும் உண்மை சம்பவம்..!
இயக்குனர் அருண் வசீகரன் திரைப்படக்கல்லூரியில் பயின்றவர் குறும்படங்கள் விளம்பரப் படங்கள் மற்றும் வெப் தொடர் ஒன்றையும் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்கள் நிகழ்ந்த நிஜமான இடங்களுக்கே சென்று படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் 25 முதல் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. த்ரிஷா, மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், M.S.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ‘Dancing Rose’ சபீர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
