வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்
(Movie Scroll) மூவி ஸ்க்ரோல் சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..

யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.
இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்தபோது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்.
கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான். இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்..
இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்..









