• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு தயாரான பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

by Tamil2daynews
February 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வெளியீட்டுக்கு தயாரான பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

 

இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.

‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி’ படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார்.
இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைந்துள்ளார்.

படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.
மேலும், `துருவங்கள் 16′ படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ளிட்ஸ்கெர்க் ஃபிலிம்ஸ் (Blitzkrieg Films), ஏபிகே சினிமா (APK Cinema) மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.

படக்குழு விவரம்:

– இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் (அனிமல், அர்ஜூன் ரெட்டி)
– ஒளிப்பதிவு: சுஜித் சரங்
– படத்தொகுப்பு: கிரண் தாஸ்
– சண்டைப்பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்
– ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ்
– விளம்பர வடிவமைப்பு: எல்லோடூத் (Yellowtooth)
– விஷுவல் புரமோஷன்: ஸ்னேக் பிளான்ட் எல்எல்பி (Snake Plant LLP)
– மக்கள் தொடர்பு: ஶ்ரீ வெங்கடேஷ்

Previous Post

“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Next Post

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.