• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்

by Tamil2daynews
February 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்

 

(Movie Scroll)  மூவி ஸ்க்ரோல் சார்பில்  SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..

இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.

யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.

இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதன் வலி குறித்து ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்கிற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்த்தபோது தோன்றிய யோசனையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தக் கதையை உருவாக்கிவிட்டு விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கேவிடம் சொன்னோம்.. அவருக்கும்  கதை பிடித்திருந்தது.. கதையை காமெடியாக உருவாக்காமல் கொஞ்சம் சீரியஸாக உருவாக்கினோம்.. கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர மற்றபடி இது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை தான்

கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அதை வைத்து படம் பண்ணலாம் என்கிற முயற்சி தான். இது. மற்றபடி பெண்களை கிண்டலடித்து தவறாக சித்தரிப்பது அல்லது கர்ப்பமாவதை வைத்து காமெடி செய்வது போன்று இல்லாமல் விஷயங்களை சீரியசாகவே பேசி இருக்கிறோம்..

இரண்டு மணி நேர படமாக உருவாக்கலாம் என நினைத்து சில காரணங்களால் இதை ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்..

மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) யூடியூப் தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோடை வெளியிடத்  திட்டமிட்டு இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாக இருக்கிறது.
Previous Post

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

Next Post

‘யோகி டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Next Post

'யோகி டா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.