ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

by Tamil2daynews
September 14, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

 

போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார்.
இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார்.
“இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்,” என்று கூறினார்.
​​“நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். மோகன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்,” என்று அமீர் தெரிவித்தார்.
“இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மற்ற போட்டிகளை போலல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.
Previous Post

சேலம் மக்களுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

Next Post

டிஸ்கவரி புக் பேலஸில் ஜெயகாந்தன் குடில் திறப்பு விழா

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சக்குருவி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0
  • “காத்து வாக்குல ரெண்டு காதல்” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தலைக்கூத்தல் – விமர்சனம்

February 6, 2023

கதை நாயகனாக யோகி பாபு நடிக்கும் புதிய படம் ‘லக்கி மேன்’..!

February 6, 2023

நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி

February 6, 2023

பாடகி வாணி ஜெயராம் மறைவு ” மலை ” படக்குழுவினர் வருத்தம்.

February 6, 2023

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்.

February 6, 2023

சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று காலை 11மணிக்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது…

February 6, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!