ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

by Tamil2daynews
April 11, 2022
in சினிமா செய்திகள்
0
முதல்வரும், தளபதியும்  களை கட்டும் பாண்டிச்சேரி..!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருக்கும் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில், பாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 1008 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த சுப விழாவில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ படப் புகழ் நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடிகர் பாண்டி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தனர்.

இவ்விழாவில் நடிகர் ஸ்ரீராம் பேசுகையில்
,” எங்களுடைய வீட்டில் ஒன்றரை அடி உயர சாய்பாபா சிலை ஒன்று உள்ளது. என்னுடைய பெற்றோர்கள் அதற்கு ஆரத்தி காட்டும் பொழுது, காண்பதற்கு வித்தியாசமாக இருக்கும். நான் அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன். தற்போது வளர்ந்து நடிகனான பிறகும் இன்றும் எங்களுடைய வீட்டில் சாய்பாபா சிலைக்கு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல அற்புத தருணங்களை சாய் பாபாவின் அருளால் சந்தித்திருக்கிறேன். சாய்பாபா ஆலயத்தில் அவருடைய பிறந்த நாளையும் ஸ்ரீராம நவமி விழாவையும் கொண்டாடுகிறோம். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டவுடன், மறுப்பு எதுவும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இதுவும் அவரது ஆசி தான். சாய்பாபாவை வணங்குவதால் நம்முள் இறை நம்பிக்கை அதிகரித்து மன அமைதியும்,  வெற்றி பெறுவதற்கான சூழலும் உருவாகிறது. ” என்றார்.

துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தை ஏற்படுத்தி, நடத்திவரும் சாய்பாபா பக்தையும், ஆலயத்தின் தலைவருமான திருமதி புஷ்பலதா ராஜா பேசுகையில்,” இந்த இடத்தில் ஆலயத்தை எழுப்ப வேண்டும் என்பது எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் லட்சியம். இதற்காக நானும் என்னுடைய கணவரும் இணைந்து பாடுபட்ட போது, சாய்பாபா பக்தர்களின் ஆதரவினால் இதனை முழுமையாக நிறைவு செய்தோம். நான்காம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். 1008 சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரதானம், அன்ன தானத்தையும் வழங்கியிருக்கிறோம். சாய்பாபாவின் அருளால்தான் இது சாத்தியமானது என்பதில் எங்களுக்கு மனப்பூர்வமான நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து ஆண்டுதோறும் பாபாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது.” என்றார்.
ஆலயத்தின் சாய்பாபாவிற்கு தினசரி சேவை செய்துவரும் பக்தர் தினேஷ் சாய்ராம் பேசுகையில், ” நான்காண்டுகளாக இங்கு நான் சாய்பாபா சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறேன். துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்களின் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறி வருவதால் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைக்காக ஆலயத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான சேவையை ஆலய நிர்வாகம் முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. உங்களது பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். அது விரைவாகவும், நிறைவாகவும் நடைபெறும். இந்த அற்புதத்தைக் காண ஒருமுறை ஆலயத்திற்கு வருகை தாருங்கள்” என்றார்.
Previous Post

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார் !

Next Post

பிக்பாஸ் ஹவுஸில் வெளியிடப்பட்ட “மை3” தலைப்பு..!

Next Post
முதல்வரும், தளபதியும்  களை கட்டும் பாண்டிச்சேரி..!

பிக்பாஸ் ஹவுஸில் வெளியிடப்பட்ட "மை3" தலைப்பு..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

July 5, 2022

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

July 4, 2022

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

July 4, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.