• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஹவுஸில் வெளியிடப்பட்ட “மை3” தலைப்பு..!

by Tamil2daynews
April 11, 2022
in சினிமா செய்திகள்
0
முதல்வரும், தளபதியும்  களை கட்டும் பாண்டிச்சேரி..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிக்பாஸ் ஹவுஸில் வெளியிடப்பட்ட 
“மை3” தலைப்பு..!

சென்னை இந்தியா 2022 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.

பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது…

 

இந்த தொடரில் பங்குகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. உலகளவில் பிரமாண்ட படைப்புகளை தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவது பெருமை. இது என்னுடைய முதல் இணைய தொடர்.  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள். எங்கள் தொடரின் தலைப்பை தமிழகத்தின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சியில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை  தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் கூறியதாவது…

நான் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன், அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கைகோர்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன். மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் ராஜேஷ் M கூறியதாவது…

இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை  இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர்,  இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி.

“மை3″  தொடர் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். “மை 3″ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவுள்ளது.
Previous Post

நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.

Next Post

விரைவில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

Next Post
முதல்வரும், தளபதியும்  களை கட்டும் பாண்டிச்சேரி..!

விரைவில் வெளியாகும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

Popular News

  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.