• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கிய விஷாலின் #சக்ரா இந்தி டிரைலர் இந்தியில் பிரமாண்டமாக  வெளியீடு

by Tamil2daynews
February 16, 2021
in சினிமா செய்திகள்
0
இந்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கிய விஷாலின் #சக்ரா இந்தி டிரைலர் இந்தியில் பிரமாண்டமாக  வெளியீடு
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முதல் முறையாக நடிகர் விஷால் நடிப்பில் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது “சக்ரா” திரைப்படம்.  விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் “சக்ரா” திரைப்படம் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களுல் ஒன்றாக மாறியிருக்கிறது.
நீண்ட பொது முடக்க காலத்திற்கு பிறகு சமீபத்தில்  வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ரவிதேஜாவின் ‘க்ராக்’ திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது.  அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் நடிகர் விஷால் நடித்துள்ள “சக்ரா” படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடிகர் விஷாலின் படங்கள், வழக்கமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும். இம்முறை முதல்முறையாக “சக்ரா” திரைப்படம் இந்தி மொழியிலும் “சக்ரா கா ரக்சக்” எனும் பெயரில் வெளியாகிறது.  சமீபத்தில் வெளியான “சக்ரா” படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்று, வைரலாகி வருகிறது. படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பில் இந்தி திரை விநியோகஸ்தர்கள் “சக்ரா கா ரக்சக்”  படத்தினை இந்தி படத்திற்கு இணையான பெரும் எண்ணிக்கை கொண்ட திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது…
தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்,  ஆந்திரா, தெலுங்கானா மக்கள் திரைப்படங்கள் மீது கொண்டிருக்கும் காதலும்  அவர்கள் தந்துவரும் ஆதரவு மிகப்பெரியது. கடின உழைப்பில், பெரும் பொருட்செலவில் “சக்ரா” திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். சைபர் க்ரைம் உலகினை மையமாக வைத்து உருவாகியுள்ள “சக்ரா” படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள். இந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது  பெரும் நம்பிக்கையை தந்துள்ளது.
தற்போது சக்ரா படத்தினை இந்தி மொழியில்  “சக்ரா கா ரக்சக்”  என வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சைபர் க்ரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “சக்ரா” படத்தினை விஷாலின் Vishal Film Factory நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் M.S. ஆனந்தன்  எழுதி இயக்கியுள்ளார். விஷால், ஷ்ரதா ஶ்ரீநாத், ரெஜினா கஸண்ட்ரா  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே, மனோபாலா ரோபோ சங்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு  செய்துள்ளார். மிக விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம்.
Previous Post

அம்மா சென்டிமெண்ட் பாடலால் கலக்கும் “சக்ரா”..!

Next Post

ஏ. வி. எம் ஸ்டுடியோவுக்குள்  சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

Next Post
ஏ. வி. எம் ஸ்டுடியோவுக்குள்  சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

ஏ. வி. எம் ஸ்டுடியோவுக்குள்  சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த “நட்சத்திரா” பட ஃபர்ஸ்ட் லுக் ! 

    5 shares
    Share 5 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.