• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ‘கொட்டுக்காளி’

by Tamil2daynews
March 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ‘கொட்டுக்காளி’

 

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான தனித்துவமான கதைகள் மற்றும் சிறந்த படமாக்கலுக்கு  பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
Imageஇணைத் தயாரிப்பாளர் கலை அரசு கூறும்போது, “’கூழாங்கல்’ படத்தில் இயக்குநர் வினோத்ராஜின் பணி எங்களுக்குப் பிடித்திருந்தது. இப்போது, அவருடைய இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சூரி மற்றும் அன்னா பென் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. SK புரொடக்ஷன்ஸ் எப்போதும் நல்லப் படங்களைக் கொடுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது.  அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையிலான நல்லதொரு திரைப்படமாக இது இருக்கும்”.

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறும்போது, “திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது”.

‘கொட்டுக்காளி’ படத்தை எழுதி இயக்குபவர் பி.எஸ். வினோத்ராஜ். நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: சக்தி,
படத்தொகுப்பு: கணேஷ் சிவா,
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் ஜி, எஸ். அழகிய கூத்தன் ,
பப்ளிசிட்டி டிசைனர்: கபிலன்,
மார்கெட்டிங் & புரமோஷன்ஸ்: ராகுல் பரசுராம்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: பானு பிரியா,
இணைத் தயாரிப்பு: கலை அரசு

Previous Post

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS”

Next Post

பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில் “மூத்தகுடி” திரைப்படம் !!

Next Post

பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில் “மூத்தகுடி” திரைப்படம் !!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.