அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் “ASVINS”
தரமணி (2017) & ராக்கி (2021) ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான ‘ASVINS’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான தருண் தேஜா, இந்தியாவின் சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

*நடிகர்கள்:* விமலா ராமன், முரளிதரன் (“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படப்புகழ்), சரஸ் மேனன், உதய தீப் (“நிலா கலாம்” திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.